ஃபாஸ்ட் ஃபுட் மற்றும் பஜ்ஜி பிரியர்களே!! இந்த செய்தி உங்களுக்கு தான்!!

Photo of author

By CineDesk

ஃபாஸ்ட் ஃபுட் மற்றும் பஜ்ஜி பிரியர்களே!! இந்த செய்தி உங்களுக்கு தான்!!

உங்களுக்கு தெரியாத பல சுவாரசியமான மற்றும் நீங்கள் இதுவரை வாழ்நாளில் உங்களுக்கு தெரியாமல் செய்துவரும் தவறுகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் அன்றாட வாழ்வில் பாஸ்ட்புட் மற்றும் பஜ்ஜியை அதிகம் ருசிப்பவர்களா கட்டாயம் இந்த செய்தி உங்களுக்கு தான். பொதுவாக கடைகளில் ஃபாஸ்ட்ஃபுட் அல்லது பஜ்ஜியை வாங்கும் பொழுது அதை நியூஸ் பேப்பரில் வைத்து மடித்துக் கொடுப்பது வழக்கம் தான். ஆனால் இனிமேல் அப்படி நியூஸ் பேப்பரில் வைத்து மடித்துக் கொடுக்கும் பாஸ்ட்புட் பஜ்ஜி அல்லது வேறு ஏதாவது உடனே சாப்பிடக்கூடிய உணவுப் பொருட்களை கொடுத்தால் அதை சாப்பிட வேண்டாம்.

ஏனெனில் நியூஸ் பேப்பரில் வைத்து மடித்துக் கொடுக்கும் உணவு பொருட்களை சாப்பிடும் பொழுது நமக்கு கேன்சர் அதாவது புற்று நோய் வருவதற்கு கூட வாய்ப்பு அதிகம் உள்ளது என மருத்துவர்கள் கூறுகின்றனர். மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மட்டுமின்றி உணவு பாதுகாப்புத் துறையினரும் கூட இதைத்தான் கூறுகின்றனர். நியூஸ் பேப்பரை பிரிண்ட் செய்யும் பொழுது அதில் உள்ள எழுத்துகளை பலவித கெமிக்கல்கள் சேர்த்தேன் பிரிண்ட் செய்வார்கள். மேலும் அந்த நியூஸ் பேப்பரை பல மக்கள் பயன்படுத்தி இருப்பார்கள் அப்படி பயன்படுத்தும் பொழுது அவர்கள் கையில் உள்ள சிறிய சிறிய மைக்ரோ ஆர்கநிசம்ஸ் கூட அந்த பேப்பரில் தங்கியிருக்கும். இதை அப்படியே எடுத்து கடைகளில் கிழித்து உணவு பொருட்களை வைத்து மடித்து கொடுத்துவிடுகிறார்கள். இப்படி மடித்துக் கொடுக்கும் பேப்பரில் உள்ள உணவுகளை நாம் உட்கொள்ளும் போது நம் உடலில் ஏகப்பட்ட விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

மேலும் அந்தப் பேப்பரில் வைத்து பஜ்ஜி, போண்டா சாப்பிடும் நபர் அந்த பஜ்ஜியில் உள்ள எண்ணெயை பேப்பரில் வைத்து கசக்கி எடுத்து சாப்பிடும் பொழுது அதில் பிரிண்ட் செய்யப்பட்டு உள்ள கெமிக்கல் கலந்த எழுத்துக்கள் பஜ்ஜியிலோ அல்லது போண்டாவிலோ  ஒட்டிக் கொண்டு நம் உடலுக்குள் செல்லும் பொழுது நமக்கு கேன்சர் வருவதற்கு கூட வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே நீங்களும் இதே போல் நியூஸ் பேப்பரில் மடித்து ஏதாவது ஒரு உணவை வாங்குபவர்கள் என்றால் இனிமேல் அதை வாங்குவதை தவிர்த்து கொள்ளுங்கள். மாறாக விட்டிலிருந்து எடுத்து செல்லப்பட்ட பாத்திரத்திலோ அல்லது எந்த ஒரு அச்சும் செய்யபடாத  வெள்ளை காகிதத்திலோ வைத்து வாங்கி கொள்ளுங்கள்.