தென்காசி மாவட்டத்தில் காதல் திருமணம் செய்த இளம்பெண் குருத்திகா கடத்தல் வழக்கில் 3 மாதங்களுக்கு பிறகு தந்தை கைது. நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த கிருத்திகாவையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த போலீசார் கொண்டு வந்தனர்.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள கொட்டாகுளத்தைச் சேர்ந்தவர் வினித். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த குருத்திகாவும் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்கள் இருவரும் வினித்தின் உறவினர் வீட்டில் இருக்கும்போது பெண்ணின் தந்தை நவீன் பட்டேல் மற்றும் பத்துக்கும் மேற்பட்டவர்கள் அங்கு சென்று வீடு புகுந்து கிருத்திகாவை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றனர்.
இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதைத் தொடர்ந்து குற்றாலம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். நீண்ட காலமாக கிருத்திகா எங்கு இருக்கிறார் என்பது தெரியாமல் சூழ்நிலை இருந்தது.
இதன் பிறகு நீதிமன்ற உத்தரவின் படி கிருத்திகா மதுரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். இதன் பிறகு அவரது விருப்பப்படி உறவினருடன் அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த கடத்தல் வழக்கில் பெண்ணின் தந்தை நவீன் பட்டேல் சுமார் மூன்று மாத காலம் காலமாக தலைமுறைவாக இருந்தார். அவரை நேற்று தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் அகமதாபாத்தில் கைது செய்தனர்.
பின்னர் அங்குள்ள நீதிமன்றத்தில் அவர் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் கால அவகாசம் கேட்டு அவரை குற்றாலம் போலீஸ் நிலையத்திற்கு இன்று போலீசார் கொண்டு வந்தனர்.
நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த கிருத்திகாவையும் போலீசார் குற்றாலம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்துள்ளனர். நவீன் படேலை செங்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய உள்ளனர். கிருத்திகா மதுரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.