மகனை தொடர்ந்து தந்தை உயிரிழப்பு! பின்னணியின் மர்மம் என்ன?

Photo of author

By Rupa

மகனை தொடர்ந்து தந்தை உயிரிழப்பு! பின்னணியின் மர்மம் என்ன?

மயிலாடுதுறை மாவட்டம் சேந்தங்குடியை சேர்ந்தவர் தான் வினோத்.இவருக்கு வயது (40).இவரு மனைவி சாரதா.இவர்களுக்கு சாலமன்,சாம்சன்,ஷாலினி என்ற மூன்று பிள்ளைகள் உள்ளனர்.வினோத் என்பவர் அந்த ஊரிலேயே வீடியோ எடுக்கும் தொழிலை செய்து வந்துள்ளார்.நேற்று மாலை பிள்ளைகள் நாகங்குடி கிராமத்தில் உள்ள தண்ணீர் பாய்ந்தான் குளத்தின் அருகே விளையாடி வந்துள்ளனர்.

அதன்பின் அது மாலை நேரமானதால் அங்குள்ளவர்கள் அங்கு விளையாடிய குழந்தைகளை வீடிற்கு செல்லுமாறு கூறியுள்ளனர்.அனைத்து குழந்தைகளும் அவர்களது வீட்டிற்கு சென்றுள்ளனர்.ஆனால் சாம்சன் மட்டும் யாருக்கும் தெரியாமல் அங்கேயே பதுங்கி விளையாடி வந்துள்ளான்.இரவு ஏழு மணியாகியும் சாம்சன் வீடு திரும்பாததால் அவர்களது பெற்றோர் தேடியுள்ளனர்.எங்கு தேடியும் சாம்சன் கிடைக்காதால் அவருடன் விளையாண்ட நண்பர்களை விசாரித்துள்ளனர்.அவனது நண்பர்கள் நாங்கள் அனைவரும் குளத்தின் அருகில் தான் விளையாடிக்கொண்டிருந்தோம் பிறகு வீடு திரும்பிவிட்டோம் என கூறியுள்ளனர்.

பின்பு அவர்கள் சேந்தங்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.அதன்பின் முத்துகுமார் தலைமையில் தீ அனைப்பு வீரர்கள் அந்த குளத்தில் தேடி பார்த்துள்ளனர்.அதன்பின் சாம்சன் உயிரிழந்த நிலையில் கிடைத்தார்.இதை பார்த்த பெற்றோருக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.இதனைத்தொடர்ந்து துக்கம் தாங்கிக்கொள்ள முடியாமல் சாம்சனின் தந்தையும் வீட்டில் யாரும் இல்லா நேரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.முதலில் மகன் உயிரிழப்பு அதிலிருந்து மீளாத குடும்பத்திற்கு அடுத்தபடியாக அவரது தந்தை உயிரிழப்பு அந்த குடும்பத்திற்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.இதில் ஏதேனும் மர்மம் உள்ளதா என போலீஸ் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.