இந்தியன் 2 படத்தில் நடிக்கும் யுவராஜ் சிங்கின் தந்தை! இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சி பதிவு!
இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தையுமான முன்னாள் கிரிக்கெட் வீரருமான யோகராஜ் சிங், சங்கர் இயக்கம் “இந்தியன் 2” படத்தில் நடித்து வருகிறார்.
இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. இதில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, சித்தார்த், மனோபாலா, சமுத்திரகனி, யோகி பாபு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். லைக்கா நிறுவனமும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரித்து வருகின்றனர். மேலும் இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
அடுத்த ஆண்டு இந்த திரைப்படம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இதை யுவராஜ் சிங் தந்தையான யோகராஜ் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில், கேமராவிற்கு பின்னால் இருக்கும் அனைத்து ஹீரோக்களுக்கும் மரியாதை. என்னை மேலும் ஸ்மார்டாக மாற்றியதற்காக நன்றி மேக்கப் மேன். கமல்ஹாசன் ஜி உடன் இந்தியன் 2 படத்திற்கு த லயன் ஆப் பஞ்சாப் தயாராக உள்ளது எனவும் பதிவிட்டுள்ளார். இவர், ரஜினி நடிப்பில் வெளிவந்த தர்பார் படத்தில் ஏற்கனவே நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.