பெண்களே ஜாக்கிரதை! உடலில் இந்த பிரச்சனைகள் இருந்தால் ஆண்களை விட முதலில் உங்களுக்கு தான் ஹார்ட் அட்டாக்!

0
71

பெண்களை ஜாக்கிரதை! உடலில் இந்த பிரச்சனைகள் இருந்தால் ஆண்களை விட முதலில் உங்களுக்கு தான் ஹார்ட் அட்டாக்!

இந்த காலகட்டத்தில் ஆண் பெண் இருவருக்கும் இளம் வயதிலேயே மாரடைப்பு வந்து விடுகிறது. இதற்கு மாறுபட்ட வாழ்க்கை முறையை காரணம். குறிப்பாக உணவு பழக்க வழக்கங்கள் மாறுபட்டது முக்கிய காரணம் என்று கூறலாம். அந்த வகையில் ஆண்களை விட பெண்களுக்கு அதிக அளவில் மாரடைப்பு ஏற்படுகிறது.

குறிப்பாக சில உடல் உபாதைகள் உள்ள பெண்களுக்கு ஆண்களை காட்டிலும் 70% அளவிற்கு பெண்களுக்கு மாரடைப்பு நிகழ்கிறது. குறிப்பாக சர்க்கரை நோய் உள்ள பெண்களுக்கு ஆண்களை விட விரைவில் மாரடைப்பு ஏற்பட்டு விடுகிறது.

ஏனென்றால் ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு மிக விரைவிலேயே அதற்கான ஆபத்துக்களை ஏற்படுத்துகிறது. பெண்களுக்கு பிற்காலத்தில் வரவேண்டிய மாரடைப்பானது இந்த சர்க்கரை நோயால் விரைவிலேயே வருவதற்கு அதிக வாய்ப்புகளை ஏற்படுத்துகிறது.

இரண்டாவதாக உடல் பருமன் ஆண்களும் பலர் உடல் பருமன் உள்ளவர்களாக தான் உள்ளனர். உங்கள் உடல் பருமன் அதிகமாக நேரிட்டால் அனைத்திலும் பிரச்சனையை சந்திக்க நேரிடுகிறது. மருத்துவ ரீதியாக ஆண்களை விட பெண்கள் அதிக உடல் எடை கொண்டிருந்தால் 70% வரை இவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கு சாத்திய கூறுகள் அதிகம் என கூறுகின்றனர்.

மூன்றாவதாக உயர் ரத்த அழுத்தம் ஆகும். பெண்களுக்கு ஒரு காலகட்டத்தில் மாதவிடாய் நின்றுவிடும். சமயத்தில் கொலஸ்ட்ரால் அதிகரிக்க கூடும். அவர் அதிகரிக்கும் பொழுது இருதயத்திற்கு இதுவே ஆபத்தாகவே மாறிவிடுகிறது.இதுமட்டுமின்றி பிற காரணங்களாலும் இதய நோய் ஏற்படும். தேவையற்ற மன அழுத்தம்,குடும்பத்தில் யாருக்கேனும் இருதய நோய் இருந்து மரபணு மூலம் தொடர்வது போன்ற காரணங்களால் பெண்களுக்கு மாரடைப்பு விரைவிலேயே ஏற்படும்.