CRIME: ஓடிசாவில் புதிய பைக் வாங்க பிறந்த குழந்தையை விற்ற தந்தை.
இந்தியாவில் பைக் மோகம் என்பது இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து கொண்டே வருகிறது. பைக் வாங்குவதற்கு கடன் வாங்குவது, வீட்டில் இருக்கும் சேமிப்பு நகைகளை அடகு வைப்பது நாம் அனைவரும் பார்த்து இருப்போம் ஆனால், புது பைக் வாங்க பிறந்த குழந்தையை விற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அதாவது, ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் ஹத்மாத் கிராமத்தை சேர்ந்தவர் தர்மு பெஹெரா. இவருக்கு இரண்டு திருமணம் நடைபெற்று இருக்கிறது. முதல் மனைவிக்கு 2குழந்தைகள். இரண்டாம் மனைவியை திருமணம் செய்வதற்கு முன்பே அப் பெண்ணுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்து இருக்கிறது. இந்த நிலையில் இரண்டாம் மனைவிக்கு 2வது குழந்தையை பெற்றெடுக்க கடந்த டிசம்பர் 19 ஆம் தேதி பரிபாடாவில் உள்ள பிஆர்எம் மருத்துவக் கல்லூரியில் சேர்த்து இருக்கிறார் தர்மு பெஹெர.
இத் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்து இருக்கிறது. இந்த நிலையில் பிறந்து 10 நாட்களே ஆன குழந்தையை இடைத்தரகர்கள் மூலம் குழந்தை இல்லாதவர்களுக்கு விற்று இருக்கிறார்கள் இத்தம்பதியினர். அதற்காக பெற்ற பணத்தில் புதிய பைக் ஒன்றை வாங்கி இருக்கிறார். அந்த பைக்கில் தன் குடும்பத்துடன் அவரது சொந்த கிராமத்தில் உலா வந்து இருக்கிறார்.
பிறந்த குழந்தையை விற்று இருப்பதை அறிந்த ஊர் மக்கள் குழந்தைகள் நலக் குழு (CWC) காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்கள். எனவே போலீசார் நடத்திய விசாரணையில் விற்கப்பட்ட குழந்தை மீட்கப்பட்டுள்ளது. மேலும், குழந்தையை வளர்க்க பணம் இல்லாததால் இச் செயலை செய்ததாக அத்தம்பதியினர் குற்றத்தை ஒப்புக் கொண்டார்கள்.