மகளின் தலையுடன் சாலையில் நடந்து சென்ற தந்தை! பதறியோடிய மக்கள்!

Photo of author

By Rupa

மகளின் தலையுடன் சாலையில் நடந்து சென்ற தந்தை! பதறியோடிய மக்கள்!

இக்கால கட்டத்தில் பெண்களுக்கு எதிரான பல சம்பவங்கள் நடந்து வருகிறது.இந்நிலையில் உத்திரபிரதேசத்தில் ஹர்டோய் என்னும் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் சர்வீஷ் குமார் மற்றும் அவரது மகள் வசித்து வருகின்றனர்.

தனது மகளுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதை அறிந்த அவரது தந்தை சர்வீஷ் குமார் மிகுந்த கோபமடைந்துள்ளார்.இதனையடுத்து அதிக அளவு கோபமடைந்த அவரது தந்தை தான் பெற்ற மகளின் தலையை தானே வெட்டி எடுத்துள்ளார்.

கூர்மையான ஆயுதம் கொண்டு அவரது மகளின் தலையை வெட்டி எடுத்துள்ளார்.தலையை வெட்டி எடுத்தது மட்டுமின்றி மகளின் தலையை எடுத்துக்கொண்டு காவல் நிலையத்தை நோக்கி சாலையில் நடந்து சென்றுள்ளார்.சாலையில் நடந்து சென்ற மக்கள் அதை பார்த்து பயந்து பதறியடித்து ஓடியுள்ளனர்.இதனையடுத்து சம்பவத்தை தெரிந்து கொண்ட போலீசார் வழியிலேயே அவரை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

மேற்கொண்டு அவரிடம் விசாரித்த போது தலை மட்டும் தான் என்னிடம் உள்ளது.மீதி சடலம் வீட்டினுள் உள்ளது என கூறியுள்ளார்.இந்த சம்பவத்தில் மகளின் தலையை கைப்பற்றும் போது சரியாக செயல்படாத போலீசாரை சஸ்பென்ட் செய்தனர்.தேசியளவில் பெண்களுக்கான குற்றத்தில் உதிரப்பிரதேசத்தில் தான் அதிக அளவு குற்றங்கள் நடைபெறுகிறது.

இதை குறைக்க அந்த மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.2019 மட்டும் 7,444 போக்சோ குற்றங்கள் இம்மாநிலத்தில் பதிவாகியுள்ளது என கூறுகின்றனர்.பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிக அளவு  பதிவாகியுள்ளதாக கருத்துகணிப்பில் கூறுகின்றனர்.ஈவு இரக்கம் இல்லாமல் செய்த இச்சம்பவம் மக்களிடயே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.