தந்தை உயிரிழப்பு… வீட்டினுள் கல்லூரி மாணவியிடம் 17 வயது சிறுவன் செய்த முகம் சுளிக்கும் சம்பவம் !

0
216
Father's death... 17-year-old boy frowned at college student at home!
Father's death... 17-year-old boy frowned at college student at home!

தந்தை உயிரிழப்பு… வீட்டினுள் கல்லூரி மாணவியிடம் 17 வயது சிறுவன் செய்த முகம் சுளிக்கும் சம்பவம் !

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயதுடைய மாணவி தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் கல்லூரியில் முதலாமாண்டு விடுதியில் தங்கி படிக்கிறார். இரு தினங்களுக்கு முன்பு இவர் தனது சக தோழியின் தந்தை இறந்து விட்டதாக கூறி விடுதியை விட்டு வெளியேறியுள்ளார். அவ்வாறு வெளியேறியவர் மீண்டும் வரவில்லை. அவர் காணாமல் போனதை அறிந்த கல்லூரி நிர்வாகம் அவரின் பெற்றோரிடம் கூறியது. அப்பெண்ணின் பெற்றோரும் பல இடங்களில் தேடி உள்ளனர். தேடியும் கிடைக்காததால் போலீசார் க்கு புகார் கொடுத்துள்ளனர்.

போலீசார் விசாரணை செய்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. இந்தப் பெண் பள்ளி படிக்கும் பருவத்திலேயே தனது சக மாணவனை காதலித்து வந்துள்ளார். இருவரும் ஆறாம் வகுப்பு படித்து முடித்த இரண்டு ஆண்டுகளிலேயே வீட்டை விட்டு ஓடியும் உள்ளனர். தற்பொழுது இப்பெண்ணின் வீட்டார்,இந்த பெண்ணை  விடுதியில் சேர்த்து படிக்க வைத்து வருவதால் இருவராலும் சந்தித்துக் கொள்ள முடியவில்லை. இதனால் மீண்டும் அப்பெண் காதலித்த பையனுடனே சென்றுள்ளார். மேலும் இருவரும் திருச்சி மாவட்டத்தில் முத்துவந்தூர் என்ற பகுதியில் வசித்து வருவதாக போலீசாருக்கு தெரிய வந்தது.

போலீசார் அந்த பகுதிக்கு சென்று இருவரையும் மீட்டனர். இருவரிடம்  விசாரணை செய்ததில் அம் மாணவன், மாணவியின் அனுமதியின்றி உடலுறவு வைத்துக் கொண்டதாக தெரிய வந்தது. மாணவனை போலீசார் கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர். மேலும் மாணவி அவருடன் உடலுறவு வைத்துக் கொண்டதால், மேற்கொண்டு மருத்துவ சிகிச்சை மற்றும் சோதனைகள் செய்யப்பட்டது. இருவரும் மனம் விரும்பி உடலுறவு வைத்துக் கொண்டாலும், இவர்கள் மைனர் என்பதால் அது சட்டத்திற்கு எதிரானது.

Previous articleநீர் வரத்து அதிகரிப்பு! சுற்றலா பயணிகள் செல்ல தடை!
Next articleஉயர் கல்வித்துறை வெளியிட்ட புதிய உத்தரவு! கல்லூரிகளில் தமிழ் பாடம் கட்டாயம்!