உடல் சோர்வு இடுப்பு வலி முடி உதிர்தல் பிரச்சனையா?? இதை மட்டும் ஒரு கைப்பிடி சாப்பிட்டு பாருங்க!!
தற்போது ஏராளமானவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று உடல் சோர்வு. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு உடல் சோர்வு மற்றும் இடுப்பு வலி பாடாய்படுத்தி விடும். ஏராளமான மாத்திரைகள் மருந்துகள் பயன்படுத்திய பின்னரும் இதற்கு முழுமையான தீர்வு கிடைத்ததா?? என்றால் பெரும்பாலானவர்களின் பதில் இல்லை என்று தான் வரும்.
மாத்திரை மருந்துகளால் முடியாதனவற்றை நமது உணவுப் பழக்கம் நமக்கு சரி செய்து கொடுத்து விடும். உடல் பலவீனத்தால் உடல் சோர்வு, தூக்கம் வரவில்லை என அவதிப்படுபவர்கள், தலைவலி, எலும்பு வலியால் கஷ்டப்படுபவர்கள், இடுப்பு வலி மற்றும் முடி உதிர்தல் பிரச்சனையால் வருத்தப்படுபவர்கள் இதை ஒரு கைப்பிடி சாப்பிட்டு வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
இதற்காக நீங்கள் நிறைய செலவு செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை. நம் அன்றாடம் பயன்படுத்தும் சில பொருட்களைக் கொண்டு நமது பிரச்சனைகளை சரி செய்து கொள்ளலாம்.
இதை தினமும் சாப்பிட்டு வருவதால் உங்கள் உடலுக்கு எந்த வித பக்க விளைவோ, உடல் நல கோளாறுகளோ ஏற்படாது. அவ்வளவு பலனைத் தரக்கூடிய அற்புத வீட்டு வைத்திய முறை இது!
தேவையானவை:
1. கொண்டைக்கடலை – 2 ஸ்பூன்.
2. நிலக்கடலை – 2 ஸ்பூன்
3. உலர் திராட்சை – 20
இவை மூன்றையும் ஒரு கப்பில் எடுத்துக்கொண்டு ஒரு அலசு, அலசி விட்டு இரவு முழுவதும் ஊறவைத்து விடவும். உலர் திராட்சையில் கருப்பு நிறத்தில் உள்ளது மிகவும் பலனைத் தரும்.
அடுத்த நாள் காலை தண்ணீரை வடிகட்டி விட்டு ஊற வைத்த பருப்பு வகைகளை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரவும். பிறகு சூடான பால் ஒரு டம்ளர் அருந்தவும். இதன் மூலம் உங்களுக்கு ஏற்படும் தலைவலி உடல் சோர்வு முடி உதிர்தல் பிரச்சனைகள் சரியாவதை நீங்கள் கண்கூடாக காணலாம். இந்த வைத்திய முறையை நீங்கள் காலையில் வெறும் வயிற்றில் எதுவும் சாப்பிடாமல் பயன்படுத்துவது நல்லது. இதை தினமும் பயன்படுத்துவதால் எந்தவித பக்கவிளைவுகள் ஏற்படுவதில்லை. தினமும் டீ, காப்பி குடிப்பதற்கு பதிலாக இதை சாப்பிட்டு வருவதால் உடல் நல ஆரோக்கியம் மேம்பட்டு ஏராளமான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும்.