உடலில் ஆற்றல் குறையும் பொழுது அதீத சோர்வை உணரக் கூடும்.எப்பொழுதும் சோர்வாக இருந்தால் உடல் மட்டுமின்றி மனதின் ஆரோக்கியமும் கடுமையாக பாதிக்கப்படும்.சரியாக தூங்கவில்லை என்றால் உடல் சோர்வு பிரச்சனையை அனுபவிக்க நேரிடும்.உடல் நலக் குறைபாடு இருந்தால் சோர்வு உண்டாகும்.
மன நலப் பிரச்சனை,மனசோர்வு ஏற்படும் பொழுது உடல் சோர்வடையும்.இரத்த சோகை,உயர் இரத்த அழுத்தம்,காய்ச்சல் போன்ற பிரச்சனைகளுக்கு உடல் சோர்வு முக்கிய அறிகுறியாக உள்ளது.அதேபோல் உயிருக்கு ஆபத்தான நோயான புற்றுநோய் பாதிப்பிற்கான முக்கிய அறிகுறி உடல் சோர்வு தான்.உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரித்தாலோ அல்லது குறைந்தாலோ உடல் சோர்வு பிரச்சனையை சந்திக்க நேரிடும்.நீங்கள் வழக்கம் போல் அல்லாமல் திடீரென்று அதிக உடல் சோர்வை அனுபவிக்கிறீர்கள் என்றால் மருத்துவரை அணுகி பரிசோதித்து கொள்வது நல்லது.
உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டால் உடல் சோர்வு பாதிப்பை சந்திக்க நேரிடும்.தற்பொழுது குழந்தைகளிடையே உடல் சோர்வு பிரச்சனை தலை தூக்கி உள்ளது.ஊட்டச்சத்து குறைபாடு,மொபைல் பயன்பாடு,தூக்கமின்மை போன்ற காரணங்களால் அவர்களுக்கு சோர்வு உண்டாகிறது.
உடல் சோர்விற்கான அறிகுறிகள்:
1)தூக்கமின்மை
2)இரத்த சோகை
3)தைராய்டு
4)இரத்த அழுத்தம்
5)சர்க்கரை நோய்
6)புற்றுநோய்
7)மன அழுத்தம்
உடல் சோர்விற்கான காரணங்கள்:
1)இரும்புச்சத்து குறைபாடு
2)புரதச்சத்து குறைபாடு
3)கால்சியம் குறைபாடு
உடல் சோர்வை போக்கும் உணவுகள்:
புரதச்சத்து:
*கொண்டைக்கடலை
*முட்டை
*சிவப்பு காராமணி
*பால்
*துவரம் பருப்பு
*உளுந்து பருப்பு
*பாசி பயறு
*பச்சை பட்டாணி
*தானியங்கள்
இவ்வகை உணவுகளில் புரதச்சத்து அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.புரதச்சத்து நிறைந்த உணவுகள் உடல் சோர்வை போக்குகிறது.இதய ஆரோக்கியம் மேம்பட புரதச்சத்து நிறைந்த உணவுகள் உட்கொள்ளலாம்.உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்த புரதச்சத்து அவசியமான ஒன்றாகும்.
கால்சியம் சத்து:
*பால்
*பாதாம் பருப்பு
*மத்தி மீன்
*முட்டையின் மஞ்சள் கரு
*ஆரஞ்சு ஜூஸ்
*பச்சை இலை காய்கறி
*வெள்ளை பீன்ஸ்
*சோயா
*ஓட்ஸ்
*ராகி
*எள்
உங்களுக்கு கால்சியம் சத்து குறைபாடு இருந்தால் மேலே குறிப்பிட்டுள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.கால்சியம் சத்து உணவுகள் சாப்பிடுவதால் உடல் சோர்வடைவது கட்டுப்படும்.எள்ளை பொடித்து சாப்பிட்டு வந்தால் கால்சியம் சத்து அதிகரிக்கும்.பிரண்டை துவையல்,பிரண்டை பொடி போன்றவற்றை சாப்பிட்டு வந்தால் கால்சியம் சத்து அதிகரிக்கும்.
அதேபோல் முருங்கை கீரை,பேரிச்சம் பழம்,முருங்கை காய்,உலர் விதைகள்,உலர் பழங்களை சாப்பிட்டு வந்தால் இரும்புச்சத்து கிடைக்கும்.உங்களுக்கு திடீரென்று அதிக உடல் சோர்வு ஏற்பட்டால் ஒரு வாழைப்பதை உட்கொள்ளுங்கள்.இதனால் உடல் சோர்வு குறையும்.அதேபோல் ஆரஞ்சு பழ ஜூஸ் பருகி வந்தால் உடல் சோர்வு நீங்கும்.