மனித உடலின் பெரிய உள்ளுறுப்பு கல்லீரல்.இதில் அழுக்கு,கொழுப்பு சேர்ந்தால் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் கெட்டுவிடும்.எனவே கல்லீரலை சுத்தம் செய்ய இங்கு கொடுக்கப்பட்டுள்ள பானத்தை செய்து பருகுங்கள்.
1)வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
2)ஓமம் – ஒரு தேக்கரண்டி
3)கருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டி
4)தண்ணீர் – ஒரு கப்
அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்துக் கொள்ளவும்.அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி குறைவான தீயில் கொதிக்க வைக்கவும்.
அடுத்து மற்றொரு அடுப்பில் வாணலி வைத்து ஒரு தேக்கரண்டி ஓமம்,ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகம் மற்றும் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை போட்டு குறைவான தீயில் வறுக்க வேண்டும்.இவற்றை ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதம் வரும் வரை அரைக்க வேண்டும்.
இந்த பொடியை சூடாகி கொண்டிருக்கும் நீரில் கலந்து சிறிது நேரம் கொதிக்க வைக்க வேண்டும்.பிறகு இந்த பானத்தை கிளாஸிற்கு ஊற்றி பருகினால் கல்லீரல் கொழுப்பு முழுமையாக கரையும்.
1)சீரகம் – ஒரு தேக்கரண்டி
2)ஓமம் – அரை தேக்கரண்டி
3)எலுமிச்சை சாறு – இரண்டு தேக்கரண்டி
4)தண்ணீர் – ஒன்றரை கிளாஸ்
பாத்திரத்தில் ஒரு தேக்கரண்டி சீரகம் போட்டுக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் அரை தேக்கரண்டி ஓமம் போட்டு குறைவான தீயில் வறுக்க வேண்டும்.
பின்னர் அதில் ஒன்றரை கிளாஸ் அளவிற்கு தண்ணீர் ஊற்றி குறைந்த தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.அதன் பின்னர் இந்த பானத்தை கிளாஸிற்கு வடிகட்டி எலுமிச்சை சாறை பிழிந்து பருகினால் கல்லீரல் கொழுப்பு கரையும்.
1)கருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
முதலில் கருஞ்சீரகத்தை லேசாக வறுத்து பவுடராக அரைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அதன் பிறகு அரைத்த கருஞ்சீரகப் பொடியை அதில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.
இந்த பானத்தை லேசாக ஆறவைத்து பருகினால் கல்லீரலில் தேங்கிய கொழுப்பு மற்றும் கழிவுகள் வெளியேறிவிடும்.