வியாபாரிகளின் வயிற்றில் அடித்த மத்திய அரசு! அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக நிற்கும் பரிதாபம்!
கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக மக்களை தொடர்ந்து பாதித்து வருகிறது.இந்நிலையில் கொரோனாவின் 2 வது அலை உருவாகி வருகிறது.இதனால் கொரோனா பாதிப்பில்,நான்காவது இடத்திலிருந்து மூன்றாவது இடத்திற்கு வந்துள்ளது.ஒரு மாதம் முன் சில தளர்வுகளுடன் மக்கள் வெளியே சென்றனர்.அதுமட்டுமின்றி பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தி வந்தனர்.
பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்ட ஓர் வாரத்திற்குள்ளே கொரோனா தொற்றானது மாணவர்கள்,ஆசிரியர்கள்,பொதுமக்கள் என அனைவருக்கும் பல மடங்கு வேகத்தில் பரவ ஆரம்பித்துவிட்டது.அதனை கட்டுப்படுத்தும் வகையில் நேற்று பிரதமர் மோடி அதிகம் தொற்று பரவியுள்ள மாநில முதலமைச்சர்களை காணொளி காட்சி மூலம் சந்தித்து ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
அதில் அவர்கள் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அறிவித்தனர்,அதில் அனைத்து கடைகள்,மால்கள்,திரையரங்குகளில் 50% மக்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர்.அதுமட்டுமின்றி அனைவரும் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.திருமணங்களில் 100 நபர்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.அதே போல இறுதி ஊர்வலங்களில் 50 நபர்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
மத சார்புடைய கூட்டங்கள்,திருவிழாக்கள் நடத்த அனுமதி மறுத்துள்ளனர்.இவ்வாறு பல்வேறு கட்டுபாடுகளை போட்டுள்ளனர்.அந்த கட்டுப்பாடுகளில் ஒன்று தான் சந்தைகளின் அருகிலிருக்கும் சிறுவியாபார கடைகள் போட தடை விதித்தது.இந்த சிறு வியாபாரிகள் அந்த கடையை வைத்துதான் அவர்களின் வாழ்வாதாரத்தையே நடத்துகின்றனர்.தற்போது இதற்கு தடைவிதித்ததால் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி நிற்கிறது.அதனால் சென்னை கோயம்பேட்டில் சில்லறை வியாபாரிகள் அனைவரும் இத்தடை விதித்ததை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.