காங்கிரசை முடக்க முழுவீச்சில் இறங்கும் மத்திய அரசு! உச்சகட்ட தாக்குதலால் கொந்தளிப்பு!
தற்பொழுது காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே பல்வேறு வகைகளில் தில்லுமுல்லு நடைபெற்று வருகிறது.காங்கிரஸ் சம்பந்தப்பட்ட அனைத்து செயலிகளையும் பாஜக முடக்கி வருகிறது.அந்த வகையில் காங்கிரஸ் ட்விட்டர் பக்கத்தை டுவிட்டர் நிறுவனம் தற்காலிகமாக முடக்கி இருப்பது அனைவரையும் வியப்படைய செய்துள்ளது.இத்தனை காலமாக காங்கிரஸ் தலைவர் தனது கருத்துக்களை டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து வந்தார். அதன் மூலம் பலர் அவரையும் ,அவர் செயல்களை கண்டு பாராட்டினர். அதனால் அவர் பல மக்களிடம் நல்லுறவை நாட்டு வருகிறார் என்ற பேச்சு அடிபட்டது.
இது பாஜக காதிற்கு சென்று விட்டது போல முதலில் காங்கிரஸ் தொண்டர்களின் 5000 கணக்குகளை ட்விட்டர் முடக்கியது.டிவிட்டரிடம் முடக்கியது ஏன் காரணம் கேட்டால், தேவையற்ற பதிவுகளை காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பதிவிட்டதால் கணக்கை முடக்கி விட்டோம் என ட்விட்டர் நிறுவனம் காரணம் கூறுகிறது. அதுவே ட்விட்டர் நிறுவனத்தில் ஆயிரக்கணக்கானோர் தேவையற்ற பதிவுகளை பதிவு செய்து தான் வருகின்றனர்.ஆனால் அவர்களின் கணக்குகளை முடக்கவில்லை. தற்பொழுது இந்த காங்கிரஸ் கட்சியின் டுவிட்டர் பக்கத்தை முடக்கியது மத்திய அரசு அந்நிறுவனத்திற்கு அதிக அழுத்தம் கொடுத்ததால் ஏற்பட்டது என கூறுகின்றனர்.
தற்பொழுது ராகுல் காந்தியின் கணக்கை முடக்கியதற்கு ட்விட்டர் நிறுவனம் கூறுவது, ராகுல் காந்தி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.அந்த புகைப்படத்தின் மூலம் பாதிக்கப்பட்ட சிறுமி அடையாளம் காணப்படுகிறார். அதனால் இதுபோன்றவை போக்சோ சட்டத்திற்கு கீழ் வரும் எனவே அவரின் கணக்கை முடக்கினோம் எனக் கூறுகின்றனர். இவர்கள் கூறும் காரணம் சப்பைக்கட்டு கட்டுவது போல உள்ளது. அதேபோல ராகுல்காந்தி காஷ்மிருக்கு சென்ற போது அவர் இருக்கும் இடத்திற்கு 500 மீட்டர் இடைவெளியிலேயே வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது.
அப்பொழுது அங்கு சுற்றியுள்ள மக்கள் பாதிப்படைந்தனர். இதுபற்றி நேற்று மகாராஷ்ட்ரா காங்கிரஸ் தலைவர் செய்தியாளர்களிடம் பேட்டி ஒன்று அளித்தார். அதில் அவர் கூறியது, இது ராகுல் காந்திக்கு கொலை செய்வதற்கு திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி எனபது போல உள்ளது என்றார். ஏனெனில் குண்டுவெடிப்பு நடந்தது மற்றும் தற்போது காங்கிரஸ் சம்பந்தப்பட்ட அனைத்தையும் முடக்கி வருவது என பல காரணங்கள் இருப்பதாக அவர் கூறினார். ராகுல் காந்தி சென்ற இடத்தில் குண்டு வெடிப்பு நடந்தும் மத்திய அரசு எந்தவித விசாரணையும் நடத்தவில்லை. கண்டும் காணாமலே இருக்கிறது.அந்த வகையில் பார்த்தால் இது ராகுல் காந்தியை கொலை செய்வதற்கு நடத்தப்பட்ட திட்டம் போலவே உள்ளது என்றார். இவர்கள் அனைவரும் கூறுவதைப் பார்த்தால் மத்திய அரசு காங்கிரஸை முழுமையாக முடக்கம் செய்வதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுப்பது போல தெரிகிறது என சுற்று வட்டாரங்கள் கூறுகின்றனர்.காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் 5000 பேர் மற்றும் ராகுல் காந்தியின் கணக்கை முடக்கியதால் பெரும் கொந்தளிப்பில் உள்ளனர்.