இந்த மாணவர்களுக்கு மட்டும் கட்டணம் திருப்பி அளிக்கப்படும்!.. யு.ஜி.சி வெளியிட்டுள்ள அறிவிப்பு!…
தமிழகத்தில் கடந்த மாதம் பிளஸ் 2 தேர்வுகள் முடிந்த நிலையில் பலர் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். சிலர் தேர்ச்சி அடையாத நிலையில் மறு தேர்வுக்காக விண்ணப்பித்து தற்போது அத்தேர்வை எழுதியும் வருகிறார்கள். இந்நிலையில் புது டெல்லியில் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் முதலாம் ஆண்டுடில் பல மாணவ மற்றும் மாணவிகள் தங்களின் விவரங்களை கொண்டு அக்கல்லூரியில் சேர்ந்து வருகின்றார்கள்.
மேலும் கல்லூரியில் சேர்ந்துள்ள மாணவர்கள் அனைவரும் அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் பாதியிலேயே வெளியேறுகின்றனர்.அதனை கருத்தில் கொண்டு உயர்கல்வி நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அதில் சேரும் போது கட்டிய கட்டணங்கள் அனைத்தும் திருப்பி அளிக்க வேண்டும் என யூ.ஜி.சி உத்தரவிட்டுள்ளது.
ஜே.இ.இ பல நுழைவு தேர்வுகளை எழுதும் மாணவர்கள் பலர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உயர் கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர். மேலும் அவர்களின் நலன் கருதி இந்த உத்தரவை யூ.ஜி.சி வெளியிட்டுள்ளது. அதன்படி சேர்க்கையை ரத்து செய்த மாணவர்கள் அனைவரும் செலுத்திய முழு கட்டணத்தையும் திருப்பி தர வேண்டும் எனவும் சேர்க்கை ரத்து செய்வதற்கு தனியாக செலுத்திய கட்டணம் அனைத்தும் வசூலிக்க கூடாது என யு.ஜி.சி கேட்டுக் கொண்டுள்ளது.
இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் இந்த உத்தரவை பின்பற்ற வேண்டும் என யு.ஜி.சி அறிவுறுத்தப்பட்டது.எனவே இதற்காக கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கு முழு கட்டணம் வழங்கப்படும். இத்தகவல் மாணவர்களுக்கிடையே மன அமைதியை ஏற்படுத்தி வருகின்றது.