பெண் போலீசுக்கு மீண்டும் பாலியல் தொல்லை! தொடர்ந்து அரங்கேறும் வன்கொடுமைகள்!

Photo of author

By Rupa

பெண் போலீசுக்கு மீண்டும் பாலியல் தொல்லை! தொடர்ந்து அரங்கேறும் வன்கொடுமைகள்!

தற்சமயம் அதிக அளவு பெண்களுக்கு பாலியல் தொல்லை நடந்து வருகிறது.அந்தவகையில் பெண் போலீசாருக்கு,அவர்களின் மேல் அதிகாரிகள் மற்றும் தன்னுடன் இதர பணிபுரியும் ஆண்கள் அதிக அளவு பாலியல் தொல்லை கொடுத்து வருகின்றனர்.

தற்சமயம் பெண் எஸ்.பி.யிடம் அவரது மேல் அதிகாரி பாலியல் தொல்லை கொடுத்தது தமிழகத்தையே உலுக்கும் அளவிற்கு பரபரப்பை ஏற்படுத்தியது.பெண்களுக்கு பாதுகாப்பு தர வேண்டிய காவலர்களே இவ்வாறு செய்தால் பெண்களுக்கு எங்கிருந்து பாதுகாப்பு கிடைக்கும் என மக்கள் மத்தியில் பெரும் கேள்வி எழுந்தது.

அந்தவகையில் பெண் எஸ்.பி கடந்த 21-ம் தேதி பணியில் ஈடுபட்டிருந்த போது தன்னுடன் காரில் வருமாறு அவரது மேல் அதிகாரி அழைத்து சென்றுள்ளார்.அதன்பின் பாட்டு பாடும்படி கூறியுள்ளார்.அதிகாரியின் ஆணையை மறுக்கமுடியா காரணத்தினால் பெண் எஸ்.பி பாடியுள்ளார்.

அதன்பின் அந்த மேல் அதிகாரி பெண் எஸ்.பி யின் கைகளை இறுக்கமாக பிடித்துக்கொண்டார்.பிறகு பெண் எஸ்.பி அவரிடம் கைகளை விடுமாறு கூச்சலிட்டும்,கைகளை விடவில்லையாம்.உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்திற்கு வந்த பிறகு தான் அவரின் கைகளை விட்டாராம்.

இவ்வாறு பாலியல் தொல்லை கொடுத்ததால் அடுத்த நாள் டி.ஜி.பி.மற்றும் உள்த்துறை செயலாளரிடம் பாலியல் தொல்லை கொடுத்ததாக உயர் காவல் அதிகாரி மீது புகார் அளித்தார்.பாலியல் தொல்லை கொடுத்த அதிகாரியின் பெயரையோ அல்லது புகைப்படத்தையோ வெளியிடக்கூடாது என நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.அதன்பின் அவரை பணியிலிருந்து கட்டாயம் காத்திருக்கும் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இது முடிந்து இந்த செய்தி இன்றளவும் ஆறாத நிலையில் இதனைப்போலவே தஞ்சாவூர் காவல் நிலையத்தில் தற்போது நடந்துள்ளது.தஞ்சாவூர் காவல் நிலையத்தில் நான்கு நாட்கள் முன்பு பெண் ஆயுதப்படை பிரிவிலிருந்து அய்யம்பேட்டை காவல் நிலையத்திற்கு ஓர் பெண் போலீசார் பணிக்கு வந்துள்ளார்.

அந்த காவல்நிலையத்தில் பணிபுரிபவர் தான் முருகானந்தம்.இந்த பெண் போலீஸ் தினமும் தனது பணிகளை முடித்துவிட்டு அங்குள்ள மாடியில் காவல் ஓய்வு அறையில் தங்கி வந்தார்.அதேபோல முருகானந்தனும் ஓய்வு அறையில் தங்கி வந்துள்ளார்.ஓர் காவல் நிலையத்தில் பணி புரிவதால் அந்த பெண் போலீஸ் சகஜமாக பேசி வந்துள்ளார்.

அதேபோல பணிகளை முடித்துவிட்டு அந்த பெண் ஓய்வு அறையில் ஓய்வு பெற்றுக்கொண்டிருக்கும் போது அங்கு முருகானந்தம் வந்துள்ளார்.இருவரும் சகஜமாக மாடியில் உட்கார்ந்து பேசியுள்ளனர்.இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு அந்த பெண் போலீஸிடம் முருகானந்தம் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.செய்வதறியாத அந்த பெண் போலீஸ் கூச்சளிட்டுள்ளர்.

பணிபுரியும் காவல் நிலையத்திலேயே பாதுகாப்பு இல்லை என அப்பெண், மேல் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.அதன்பின் அய்யம்பேட்டை போலீசார் முருகானந்தத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடந்த வண்ணமே உள்ளது.