உங்கள் மூட்டுகளில் இப்படி சத்தம் வருதா?? இதோ இந்த 3 பொருள் போதும்!!

உங்கள் மூட்டுகளில் இப்படி சத்தம் வருதா?? இதோ இந்த 3 பொருள் போதும்!!

உங்கள் முழங்காலில் உள்ள மூட்டுகளில் இருந்து ஒரு விதமான சத்தம் வருகிறதா? அதிக நேரம் உட்காரும்போதோ, திடீரென எழுந்திருக்கும் போதோ, நீண்ட நேரம் நடக்கும் போது மூட்டுகளில் சத்தம் கேட்கிறதா? இதை பற்றி நிறைய பேருக்கு தெரிவதில்லை.

இதை மருத்துவர்கள் Joint Crepitus என்று சொல்வார்கள். இந்த பிரச்சனைகள் வருவதற்கு முக்கிய காரணம் நமது மூட்டுகளுக்கு இடையில் ஒரு திரவம் உள்ளது.

அந்த திரவத்தில் காற்று சேரும் போது இந்த சத்தம் தோன்றுகிறது. இந்த சத்தம் வருவதை நீங்கள் அஜாக்கிரதையாக எடுத்து கொண்டால் கடுமையான ஆர்தோடிக்ஸ் (Orthotics) ஆக மாறி கீழ்வாதம் ஏற்படுகின்றது.

உங்கள் மூட்டுகளில் இந்த சத்தம் வராமல் இருக்க வெந்தயம்,பால், வறுகடலை ஆகிய மூன்று பொருட்கள் போதுமானது.

வெந்தயம்

தினமும் மூட்டுகளில் வலி, சத்தம் கேட்பவர்கள் வெந்தயத்தை எடுத்துக் கொள்ளவும். இதில் Anti Inflamatory மற்றும் ஆன்டி அக்சிடன்ட்கள் அதிகமாக இருக்கிறது.

இதனால் வெந்தயம் மூட்டுகளில் ஏற்படும் வலி, வாதம் போன்றவற்றை வேகமாக குறைக்கிறது. இதற்காக நீங்கள் எடுத்து கொள்ளும் வெந்தயத்தின் அளவுகள் உங்கள் வயதிற்கு சமமாக எடுத்து கொள்ளுங்கள்.

உதாரணத்திற்கு உங்களுக்கு வயது 35 எனில் நீங்கள் 35 வெந்தயத்தை எடுத்து கொள்ள வேண்டும். இதை முதல் நாள் இரவே ஒரு கிளாஸ் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். மறுநாள் காலையில் வெறும் வயற்றில் அந்த தண்ணீரை சூடுபடுத்தி குடியுங்கள்.

அதிலிருக்கும் வெந்தயத்தை நன்கு மென்று சாப்பிடவும். முதலில் வெந்தயத்தை சாப்பிடும் போது கசப்பாக தோன்றினாலும் தினமும் எடுத்து கொள்ளும் போது அதன் கசப்பு தன்மை பழகி விடும். வெந்தயம் நமது உடல் சூட்டை அதிகப்படுத்துவதால் இதை கர்ப்பிணி பெண்கள் எடுத்து கொள்ள வேண்டாம்.

பால்

மூட்டு பிரச்சினை உள்ளவர்கள் தினமும் 1 கிளாஸ் பால் கண்டிப்பாக அருந்த வேண்டும். நமது மூட்டுகளில் உள்ள திரவம் குறைவதால் மேற்கண்ட தொந்திரவுகள் ஏற்படுகிறது. எனவே நீங்கள் தினமும் பால் குடிப்பதால் மூட்டுகளில் உள்ள திரவம் அதிகமாகி மூட்டுகளில் ஏற்படும் சத்தம் குறைகிறது.

அதே போல் உங்களுக்கு எழும்புகளில் கால்சியம் பிரச்சினைகள் இருந்தால் பாலுடன் 1 சிட்டிகை மஞ்சள்தூள் கலந்து குடிக்கும்போது இதன் பலன்கள் இரு மடங்காக கிடைக்கிறது.

வறுகடலை

உப்பு கடலை என்று சொல்லக்கூடிய வறுகடலை 1 கைப்பிடி, வெல்லம் எழுமிச்சம் பழம் அளவு சேர்த்து சாப்பிடுவதால் மூட்டுகளில் ஏற்படும் வலி, சத்தம் அனைத்தும் குறைந்து விடுகிறது. இது சாப்பிடுவதால் கார்போஹைட்ரேட், அயன், மற்றும் பொட்டாசியம் முழுமையாக கிடைக்கிறது.

இந்த மூன்று பொருட்களை நீங்கள் தொடர்ந்து சாப்பிடுவதால் உங்கள் மூட்டுகளில் ஏற்படும் வலி, சத்தம் அனைத்தும் சரியாகிவிடும்.