விவசாய மண்ணிற்கு மக்கிய தொழு உரம்!! இதை எவ்வாறு தயாரித்து பயன்படுத்துவது?
விவசாய நிலத்திற்கு தொழு உரம் மிகவும் முக்கியம்.ஆனால் இன்று விற்கப்படக் கூடிய தொழு உரங்கள் மண்ணின் தரத்தை குறைக்கும் விதமாக இருக்கிறது.
ஆனால் தொழு உரத்தை நாமே தயாரித்து மண்ணிற்கு பயன்படுத்துவதன் மூலம் மண் வளமும் மேம்படும் செடிகளும் ஆரோக்கியமாக வளர்ந்து அதிகளவு மகசூல் கொடுக்கும்.
தேவையான பொருட்கள்:-
1)மக்கிய பசு மாட்டு சாணம்
2)ஆட்டு எரு
3)கோழிக் கழிவு
4)காய்ந்த இலைகள்,மரக் கட்டைகள்
5)மாட்டு கோமியம்
6)காய்கறி கழிவுகள்
7)மண்
8)தேங்காய் நார் கழிவுகள்
தொழு உரம் தயாரிக்கும் முறை:-
தொழு உரம் தயாரிக்க உங்கள் தோட்டத்தில் 1/4 சென்ட் அளவு இடத்தை தேர்வு செய்து கொள்ளவும்.
இந்த 1/4 சென்ட்டில் ஒரு அடி அளவிற்கு மண்ணை வெட்டி எடுக்கவும்.ஒரு குழி போன்ற அமைப்பு உருவாகும்.இந்த குழியில் மரக் கடைகளை போட்டு கொள்ளவும்.தென்னைமட்டை,வாழைத்தண்டு போன்றவற்றையும் போடலாம்.
பிறகு மக்கிய மாட்டு சாணம் 10 கிலோ அளவிற்கு பரப்பி விடவும்.அதன் பின்னர் 5 கிலோ அளவிற்கு ஆட்டு எரு,3 கிலோ அளவிற்கு கோழிக்கழிவுகளை பரப்பி விடவும்.
அதன் பின்னர் இருக்கின்ற காய்ந்த இலைகள்,காய்கறிக் கழிவுகள் தேங்காய் நார் கழிவுகளை கொட்டி பரப்பி விடவும்.
பிறகு அதன் மேல் ,மாட்டு கோமியம் 5 லிட்டர் அளவிற்கு ஊற்றவும்.பிறகு வெட்டிய மண்ணை போட்டு மூடி விடவும்.
வாரத்திற்கு ஒருமுறை இந்த மண் மீது 5 லிட்டர் மாட்டு கோமியத்தை ஊற்றி கலந்து விடவும்.இவ்வாறு வாரம் ஒருமுறை என்று 2 மாதங்களுக்கு மண்ணை கிளறி விட்டு வந்தால் இயற்கை தொழு உரம் தயாராகி விடும்.
தொழு உர மண்ணை எடுக்கும் பொழுது மிருதுவாக இருக்கும்.அதை வைத்து தொழு உரம் தயாராகி விட்டதை அறிந்து கொள்ள முடியும்.
தொழு உரம் பயன்படுத்தும் முறை:-
உங்கள் விவசாய நிலத்தில் உள்ள செடிகளை சுற்றி ஒரு கைப்பிடி அளவு கொட்டி தண்ணீர் பாய்ச்சவும்.இவ்வாறு செய்வதனால் தொழு உரம் மண்ணில் கலந்து செடிகள் ஆரோக்கியமாக வளர உதவும்.