FEVER Home Remedies: காய்ச்சலை குணமாக்க உதவும் அம்மாவின் ஆறு கை வைத்தியங்கள் இதோ!!

0
129

FEVER Home Remedies: காய்ச்சலை குணமாக்க உதவும் அம்மாவின் ஆறு கை வைத்தியங்கள் இதோ!!

நம்மை சோர்வடைய செய்யும் நோய் பாதிப்பாக காய்ச்சல் உள்ளது.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் காய்ச்சல் ஏற்படுகிறது.இதை குணமாக்க மூலிகை கசாயம் செய்து குடித்து வாருங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)ஓமவல்லி
2)தண்ணீர்

செய்முறை:-

இரண்டு ஓமவல்லி இலையை நறுக்கி ஒரு கப் தண்ணீரில் போட்டு கசாயம் போல் கொதிக்க வைத்து குடித்து வந்தால் காய்ச்சல் குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)வெற்றிலை
2)மிளகு
3)திப்பிலி
4)சுக்கு

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 250 மில்லி தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு ஒரு வெற்றிலை,2 மிளகு,2 திப்பிலி மற்றும் ஒரு துண்டு சுக்கை போட்டு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி குடித்து வந்தால் காய்ச்சல் குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)துளசி இலை
2)நொச்சி இலை
3)தேன்

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 200 மில்லி தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.பிறகு அதில் 10 துளசி இலை,ஒரு நொச்சி இலையை சேர்த்து கொதிக்க வைத்து வடித்து தேன் சேர்த்து குடித்தால் காய்ச்சல் பாதிப்பு குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)பப்பாளி இலை
2)தண்ணீர்

செய்முறை:-

பப்பாளி இலைகளை காம்பு நீக்கி பொடியாக நறுக்கி 200 மில்லி தண்ணீரில் போட்டு காய்ச்சி வடிகட்டி குடித்து வந்தால் காய்ச்சல் பாதிப்பு குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)மலைவேம்பு
2)தண்ணீர்

செய்முறை:-

ஒரு பாத்திரத்தில் மலைவேம்பு சாறு ஒரு தேக்கரண்டி சேர்த்துக் கொள்ளவும்.பிறகு அதில்
ஒரு கப் தண்ணீர் ஊற்றி கஷாயம் போல் காய்ச்சி வடிகட்டி குடித்து வந்தால் காய்ச்சல் பாதிப்பு குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)வெங்காயம்

செய்முறை:-

ஒரு வெங்காயத்தை இரண்டாக நறுக்கி கால் பாதத்தில் தேய்த்தால் காய்ச்சல் குறையும்.

தேவையான பொருட்கள்:-

1)உலர் திராட்சை
2)எலுமிச்சை சாறு

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் ஐந்து உலர் திராட்சை போட்டு தண்ணீர் ஊற்றி ஊற விடவும்.உலர் திராட்சை நன்கு ஊறி வந்ததும் அதனுள் இருக்கின்ற சாற்றை ஒரு கிண்ணத்திற்கு பிழிந்து விடவும்.பிறகு அதில்
ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடித்தால் காய்ச்சல் குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)கொத்தமல்லி விதை
2)தண்ணீர்

செய்முறை:-

ஒரு பாத்திரத்தில் ஒரு தேக்கரண்டி கொத்தமல்லி விதை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வைத்து பிறகு இதை கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வந்தால் காய்ச்சல் குணமாகும்.