இந்திய அணி தற்போது விளையாடி வரும் ஆஸ்திரேலியா தொடரில் மூன்றாவது போட்டியில் விளையாடி வருகிறது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகளில் விளையாட உள்ள நிலையில் ஏற்கனவே 2 போட்டி நடைபெற்று முடிந்த நிலையில் ஆஸ்திரேலியாவின் கப்பா மைதானத்தில் மூன்றாவது போட்டி நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் இந்திய அணி 4 போட்டிகள் வெற்றி பெறவேண்டிய சூழ்நிலையில் உள்ள போதிலும் நடைபெற்று வரும் மூன்றாவது போட்டியில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் தடுமாறி வருகின்றனர். இந்திய அணியின் முக்கிய வீரரான சுப்மன் கில் தொடர்ந்து ஆட்டத்தில் சொதப்பி வருகின்றார்.
மூன்றாவது போட்டியில் இந்தியா அணி முதலில் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 445 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. மேலும் இதில் டிராவிஸ் ஹெட் 152 ரன்களும்,ஸ்டீவ் ஸ்மித் 101 ரன்களும் எடுத்தனர். இந்நிலையில் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 4 ரன்களில் ஆட்டமிழந்தார்,சுப்மன் கில் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். விராட் கோலி 3 ரன்களில் ஆட்டமிழந்தார்.
சுப்மன் கில் இதுவரை விளையாடிய இன்னிங்சில் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் உள்ளார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இவருக்கு பதிலாக வேறு வீரரை களமிறக்கலாம் என்றும் கவிமர்சனம் தெரிவித்து வருகின்றனர்.