நடிகர் சூர்யா நடிக்கும் அடுத்த திரைப்படம்!!! படத்தில் இவங்க எல்லாரும் இருக்காங்க சூப்பர்!!! 

0
57
#image_title
நடிகர் சூர்யா நடிக்கும் அடுத்த திரைப்படத்தின் தலைப்பை வெளியிட்ட படக்குழு!!! படத்தில் இவங்க எல்லாரும் இருக்காங்க சூப்பர்!!!
நடிகர் சூர்யா நடிக்கும் 43வது திரைப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ தலைப்பையும் இந்த திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் பற்றிய முக்கிய அறிவிப்பையும் படக்குழு தற்பொழுது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நடிகர் சூர்யா தற்பொழுது இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இதையடுத்து நடிகர் சூரியா அவர்கள் தன்னுடைய 43வது திரைப்படத்தில் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்தது. தற்பொழுது அந்த தகவல்கள் உறுதியாகி உள்ளது.
அதாவது நடிகர் சூர்யா அவர்கள் நடக்கவிருக்கும் 43வது திரைப்படத்தை தயாரிக்கவுள்ள 2டி எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. மேலும் திரைப்படத்தின் தலைப்பையும் அதில் நடிக்கும் நடிகர்கள் பற்றியும் படக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி நடிகர் சூர்யா நடிக்கவுள்ள 43வது திரைப்படத்தை இயக்குநர் சுதா கொங்கரா அவர்கள் இயக்கவுள்ளதாகவும், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அவர்கள் இசயமைக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் 100வது படம் புறநானூறு ஆகும்.
நடிகர் சூர்யா நடிக்கும் 43வது திரைப்படத்திற்கு புறநானூறு என்று படக்குழு பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் புறநானூறு திரைப்படத்தில் பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மான், மலையாள நடிகை நஸ்ரியா பகத், பிரபல ஹிந்தி நடிகர் விஜய் வர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.
நடிகர் சூர்யா நடிப்பில் உருவான சூரரைப் போற்று என்ற திரைப்படத்தை இயக்குநர் சுதா கொங்கரா அவர்கள் இயக்கியிருந்தார். இந்த திரைப்படத்திற்கும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அவர்கள் தான் இசை அமைத்திருந்தார். இதையடுத்து 2வது முறையாக நடிகர். சூர்யா , இயக்குநர் சுதா கொங்கரா, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், 2டி எண்டர்டெய்ன்மென்ட் இணையும் படம் புறநானூறு என்பது குறிப்பிடத்தக்கது.