மதுரையில் நடிகர் ரஜினிக்கு சிலை வைத்து கோயில் கட்டி வழிபாடு!!! ஆச்சரியத்தில் ஆழ்த்திய ரசிகரின் செயல்!!!

0
14
#image_title

மதுரையில் நடிகர் ரஜினிக்கு சிலை வைத்து கோயில் கட்டி வழிபாடு!!! ஆச்சரியத்தில் ஆழ்த்திய ரசிகரின் செயல்!!!

மதுரை மாவட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் தீவிர ரசிகர் ஒருவர் அவருக்கு சிலை வைத்து கோயில் கட்டி வழிபாடு நடத்திய சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலத்தில் கார்த்திக் என்பவர் வசித்து வருகின்றார். திருமங்கலத்தில் கார்த்தி ஒரு திருமண தகவல் மையம் நடத்தி வருகின்றார். கார்த்திக் நடிகர். ரஜினிகாந்த் அவர்களின் தீவிர ரசிகர் ஆவார்.

இந்நிலையில் தான் வாடகைக்கு இருக்கும் வீட்டில் ஒரு அறையை நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் கோயிலாக மாற்றி இருக்கின்றார். அந்த அறையில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் நடித்த திரைப்படங்களின் காட்சிகளின் புகைப்படங்களை ஒட்டி தினமும் தீபாராதனை காட்டியும் அபிஷேகமும் செய்து வருகின்றார்.

இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு 3 அடி உயரத்தில் 250 கிலோ எடை கொண்ட கருங்கல்லால் ஆன சிலையை நிறுவினார். மேலும் அந்த சிலைக்கு பூஜை செய்தார். பூஜை முடிந்த பின்னர் கோயிலாக மாற்றப்பட்ட அந்த அறைக்கு கொண்டு சென்று அங்கு சிலையை வைத்து பால், பன்னீர், சந்தனம், இளநீர், மஞ்சள் ஆகிய பொருட்களை வைத்து அந்த சிலைக்கு அபிஷேகமும் செய்தார். மேலும் நடிகர் ரஜினிகாந்த் சிலைக்கு மாலை அணிவித்து தீபாராதனையும் காட்டினார்.

தீவிர ரஜினிகாந்த் ரசிகராக இருக்கும் கார்த்திக் அவர்களுக்கு அவருடைய பெற்றோர்களும், மனைவியும் ஆதரவாக இருக்கின்றனர். தான் வாடகைக்கு இருக்கும் வீட்டில் உள்ள ஒரு அறையை ரஜினிகாந்த் கோயிலாக மாற்றி சிலை வைத்த கார்த்திக் அவர்களின் செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.