இறுதி செமஸ்டர் தேர்வு முடிவுகள் இந்த வாரத்தில் வெளியிடப்படும் !! அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட தகவல் !!

0
162

யுஜிசி அறிவுறுத்தலின்படி பொறியியல் படிப்பிற்கான இறுதி செமஸ்டர் தேர்வுகளை கடந்த செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி முதல் 30-ஆம் தேதிக்குள் நடத்தப்பட்டது. மேலும் தேர்வு எழுதிய மாணவர்களின் இறுதி செமஸ்டர் தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகளை இந்த வார இறுதியில் வெளியிடப்படும் என்றும் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

கொரோனா நோய்த்தொற்று காரணமாக பல்கலைக்கழக இறுதி பருவத் தேர்வுகளை ஆன்லைன் மூலமாக நடத்த முடிவு செய்தது.இதனைத் தொடர்ந்து மாணவர்கள் ஆன்லைன் மூலமாக தேர்வினை எழுதினர்.

அண்ணா பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் , மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் லிட்டர் பல்கலைக்கழகங்களின் பயிலும் மாணவர்கள் ஆன்லைன் வழியாக தேர்வுகளை எழுதினார்.

தேர்வு எழுதும் மாணவர்களிடம் செல்பேசி எண் மற்றும் இ-மெயில் முகவரியை பெற்று தேர்வு நடத்தப்பட்டது.
ஆனால், தேர்வு எழுதும் சமயத்தில் மாணவர்கள் பல்கலைக்கழகம் அறிவுறுத்திய முறைப்படி எழுதாமல் படுத்துக்கொண்டோம், டீக்கடையில் அமர்ந்து கொண்டும் தேர்வினை எழுதியதாக கூறப்படுகிறது.

இதுபோன்ற செயலில் ஈடுபட்டவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் ஆப்சென்ட் வழங்கப்படும் என்று அறிவுறுத்தியுள்ளது.

Previous articleஒரு நாள் மாவட்ட ஆட்சியராக பதவியேற்று பணியாற்றிய பள்ளி மாணவி !!
Next articleதிமுக நிர்வாகியால் சாதி அடிப்படையில் அவமானபடுத்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவி! பாஜக செய்த அரசியல்