ஒரு நாள் மாவட்ட ஆட்சியராக பதவியேற்று பணியாற்றிய பள்ளி மாணவி !!

0
74

நேற்று (அக்.11) சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பெண் குழந்தைகள் தினம் அனுசரிக்கப்பட்டது. இத்தினத்தை கொண்டாடும் வகையில், ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தை சேர்ந்த மேல்நிலைப்பள்ளி மாணவி எம்.ஸ்ரவாணி ஒருநாள் மாவட்ட ஆட்சியராக பணியாற்ற நியமிக்கப்பட்டார்.

நேற்று மேல்நிலைப்பள்ளி மாணவி எம்.ஸ்ரவாணி அவர்கள், புடவை அணிந்து ஆனந்தபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். அவருக்கு அங்குள்ள அரசு அலுவலர்கள் வரவேற்பளித்தனர்.

மாணவி ,பணியில் அமர்ந்த சில நிமிடத்திலேயே தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்கள் மீதான புகார்களுக்கு எதிரான தடுப்பு சட்டத்தின் கீழ் பெண்களுக்கு ரூ.25,000 நிவாரண உதவி வழங்கும் கோப்பில் தமது முதல் கையெழுத்தை பதிவிட்டார்.

இதனைத்தொடர்ந்து, இரவு நேரங்களில் பணிக்கு செல்லும் பெண்களை பாலியல் தொல்லையிலிருந்து பாதுகாப்பு அளிக்கும் வகையில், இலவச தொலைபேசி எண்ணை இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை செயல்படுத்தப்படும் சட்டத்தையும் தொடங்கி வைத்தார்.

இதுதொடர்பாக ஆனந்தபுரம் மாவட்ட ஆட்சியர் கூறுகையில்,சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அவர்களை கோரப்படுத்தும் வகையில் பதவியில் அமர வைத்ததாகவும், பெண்களை ஊக்குவிக்க இது ஒரு வாய்ப்பாக அமையும் என்று கூறினார்.இதனால் மாணவிகளின் புரிந்து கொள்ளும் ஆற்றலும் அதிகரிக்கும் மற்றும் எதிர்காலத்தில் கடமை உணர்ச்சியும் பணியாற்றுவதற்கான ஒரு வாய்ப்பாக அமையும் என்றும் தெரிவித்தார்.

 

 

author avatar
Parthipan K