பாபர் மசூதி வழக்கில் இறுதி தீர்ப்பு!

Photo of author

By Parthipan K

பாபர் மசூதி உத்திரபிரதேசத்தில் உள்ள அயோத்தி என்னும் இடத்தில்  அமைந்திருந்தது. அது டிசம்பர் 6, 1992 ல் இடிக்கப்பட்டது. இதனால் இந்து இஸ்லாமிய கலவரம் ஏற்பட்டு அதில் 2000 பேர் உயிரிழந்தனர். ஏனெனில் அயோத்தி என்பது இராமபிரான் பிறந்த புண்ணிய பூமியாகும்.  இந்து கர சேவகர்கள் அப்பூமியை கைப்பற்றும் பொருட்டு மசூதி  இடித்தனர்.

டிசம்பர் 1992 முதல் ஜனவரி 1993 வரை இந்து இஸ்லாமிய கலவரங்கள் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் நடந்தது.  இதனால் ரூ.9,000 கோடி மதிப்பில் உள்ள பொருள்கள் சேதமடைந்தது. மேலும் ஆங்காங்கே மக்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். போலீசார்  இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். 

அப்போது பாஜா தலைவர்கள் அத்வானி உமா பாரதி கல்யாண் முரளி மனோகர் ஜோஷி போன்றவர்கள் உள்பட 32 பேர் மீது வழக்கு பதிவாகி விசாரணை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது . இந்த வழக்கு கடந்த 28 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த வழக்கு விசாரணை கடந்த ஆகஸ்ட் மாதம் 31க்குள் முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கட்டளையிட்டு அதனடிப்படையில் விசாரணை தினமும் நடைபெற்றது. இவ்வழக்கை முடித்து வைக்க நீதிபதி எஸ்.கே.யாதவ் கால அவகாசம் கேட்டார். அதனால் இம்மாதம் 30ஆம் தேதி வரை தீர்ப்பு நீட்டிக்கப்பட்டது. மேலும் நீதிபதி எஸ்.கே.யாதவ் இம்மாதம் தொடக்கத்திலே தீர்ப்பு எழுத தொடங்கிவிட்டதாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.