BEd/ M.Ed/ B.Ed spl/ B.sc. + B.Ed ஆகிய பட்டடிப்புகளில் பயின்ற இறுதியாண்டு மாணவர்களின் தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடக்கவிருந்த பருவத் தேர்வுகள் அனைத்தும் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இறுதியாண்டு மாணவர்களைத் தவிர மற்ற அனைத்து மாணவர்களுக்கும் ஒத்திவைக்கப்பட்ட பருவத்தேர்வுக்கு, இதற்கு முன் கல்லூரிகளில் எழுதிய தேர்வு மதிப்பெண்களை அடிப்படையாக வைத்து மதிப்பெண்கள் வழங்க தமிழக அரசு ஆணையிட்டது.
மேலும், இறுதியாண்டு பயின்ற மாணவர்களுக்கு அவர்களின் இறுதிப் பருவத் தேர்வை செப்டம்பர் மாத இறுதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று மத்திய பல்கலை மானியக்குழு அறிவுறுத்தி இருந்தது. இதையடுத்து, இறுதியாண்டு மாணவர்களுக்கான இறுதிப்பகுதி தேர்வினை ஆன்லைன் மூலம் அனைத்துக் கல்லூரிகளும் நடத்தியது. மேலும் விடைத்தாள்களை தபால் மூலம் அந்தந்த கல்லூரிகளுக்கு அனுப்ப மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அவ்வாறு அனைத்து தேர்வுகளும் முடிந்த பிறகு கல்லூரிகளில் விடைத்தாள்கள் சமர்பிக்கப்பட்டது. இதன்பின்னர், விடைத்தாள்களை திருத்தும் பணி துவங்கியது.
இந்நிலையில், தற்போது இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி BEd/ M.Ed/ B.Ed spl/ B.sc. + B.Ed ஆகிய பட்டடிப்புகளில் பயின்ற இறுதியாண்டு மாணவர்களின் தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வு முடிகளை www.tnteu.ac.in என்ற இணைதள முகவரில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.