ஏடிஎம்மில் பணம் வரவில்லை! வங்கிகள் இழப்பீடு வழங்க உத்தரவு… ரிசர்வ் வங்கி அதிரடி!!

0
79

ஏடிஎம்மில் பிடித்தம் செய்யப்பட்ட பணத்தை குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்க தவறினால், வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் இழப்பீடு வழங்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

தற்போதுள்ள காலகட்டத்தில் பணம் தேவை என்றால் வங்கிக்கு தான் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. அருகிலுள்ள ஏடிஎம்-களுக்கு சென்றாலே போதும், நாம் வைத்திருக்கும் சேமிப்பு கணக்கிலிருந்து பணம் எடுத்துக்கொள்ளலாம். ஏடிஎம் உபயோகிக்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில், சில நேரங்களில் ஏடிஎம்களில் பணம் எடுக்கும்போது, ஏடிஎம் கோளாறு அல்லது இன்டர்நெட் கோளாறு காரணமாக பணம் வராமல் இருக்கும். ஆனால், நமது வங்கி கணக்கில் இருந்து பணம் கலந்துவிட்டதாக மெசேஜ் வரும். ஆனால், அந்தப் பணம் ஓரிரு நாட்களில் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படுவது வழக்கமாகும். இது போன்ற பிரச்சனை ஏற்படும் காலங்களில் வங்கிகள் பணம் வரவு வைக்க கூடுதல் கால அவகாசம் எடுத்துக் கொள்வதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுத்துள்ள ரிசர்வ் வங்கி, ஏடிஎம்-ல் பணம் எடுக்கும்போது பணம் வராததால், பிடித்தம் செய்யப்பட்ட பணத்தை குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்க வில்லை என்றால், ஒவ்வொரு நாளும் நூறு ரூபாய் இழப்பீடாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வழங்க வேண்டும் என்று அதிரடியாக அறிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால், வங்கிகளுக்கு இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Parthipan K