வெளியே வந்தார் வட கொரிய அதிபர் கிம்ஜாங் – மர்மம் விலகியது
கடந்த இரண்டு வாரங்களாக உலகம் முழுவதிலும் விவாத பொருளாம மாறியிருந்த வட கொரிய அதிபர் கிம்ஜாங் குறித்த வதந்தி முடிவுக்கு வந்துள்ளது.
வடகொரிய அதிபரன கிம்ஜாங், ஆண்டு தோறும் ஏப்ரல் 15ம் அவரது தாத்தாவின் பிறந்த நாள் கொண்டாத்ததில் இந்த ஆண்டு கலந்து கொள்ளவில்லை. இதனால் அது பல்வேறு வதந்திகளுக்கு வித்திட்டது.
சமீபத்தில் இவர் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்த நிலையில், அதன் காரணமாக அவர் மருத்துவமனையில் தீவிர கணகாணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. அதனை தொடர்ந்து அவர் மூளை சாவு அடைந்ததாக தகவல் பரவியது. ஒரு சில ஊடகங்கள் அவரின் இறுதி ஊர்வலம் குறித்த தகவலெல்லாம் கூட வெளியானது.
இந்நிலையில் வட கொரிய மீடியாக்கள் மே 1ம் தேதி நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் அதிபர் கிம்ஜாங் பங்கேற்று விழாவை சிறப்பித்த படங்களை வெளியிட்டுள்ளது. சமூக வலைதளங்களில் இந்த படங்கள் வைரலாகி வரும் நிலையில் அவர் குறித்து பரப்பப்பட்ட வதந்திகள் முடிவுக்கு வந்துள்ளது.