தேர்தல் நடத்த அனுமதி – தப்பியது உத்தவ் தாக்கரே அரசு!

0
74

தேர்தல் நடத்த அனுமதி – தப்பியது உத்தவ் தாக்கரே அரசு!

கடந்த ஆண்டு மஹாராஷ்ட்ராவில் மாநில தேர்தல் நடைபெற்ற நிலையில், நீண்ட இழுபறிக்குப் பின்னர் சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் இனைந்து ஆட்சியமைத்தது. முதல்வராக உத்தவ் தாக்கரே தேர்ந்தெடுக்கப்பட்டார்.

உத்தவ் தாக்கரே சட்டப்பேரவை உறுப்பினராக இல்லாத காரணத்தால் ஆட்சியமைத்து 6 மாதங்களுக்கு முன்னர் அவர் சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். எனவே வரும் 28ம் தேதிக்குள் தேர்தலில் அவர் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் மட்டுமே ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும்.

இந்நிலையில் தற்போது நாடுமுழுவதும் கொரொனா அச்சுறுத்தல் காரணமாகத் தேர்தல் நடத்த முடியாத நிலை நீடிப்பதால், சட்ட மேலவை நியமன உறுப்பினர் ஆவதற்கு உத்தவ் தாக்கரே முயற்சி செய்தார். அதன்படி, அமைச்சரவையைக் கூட்டி ஆளுநருக்கு பரிந்துரை கடிதம் வழங்கினார்.

இந்நிலையில் ஆளுநர் இந்த கடிதம் மீது இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பிரதமர் மோடியைத் தொடர்புகொண்டு சட்ட மேலவைக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

மகாராஷ்டிராவில் சட்ட மேலவைக்கு தேர்தல் நடத்த ஆணையம் ஒப்புதல் அளித்ததால் உத்தவ் தாக்கரேவின் முதல்வர் பதவி தப்புகிறது.

author avatar
Parthipan K