அரசு பள்ளி மானவர்களுக்கு நிதியுதவி!! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!

Photo of author

By Jeevitha

அரசு பள்ளி மானவர்களுக்கு நிதியுதவி!! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!

அனைத்து  மாநில அரசுகளும்  பள்ளி மாணவர்களுக்கு பல திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மேலும் பள்ளி மாணவர்களுக்கு வசதியாக இருக்க அதிரடி அறிவிப்புகளை அந்தந்த மாநில அரசு அடிக்கடி அறிவித்து வருகிறது. மற்ற மாநில அரசுகளும் பள்ளி மாணவர்களுக்கு பல திட்டத்தை  அறிவித்தும் செயல்படுத்தியும் வருகிறது.

இந்த நிலையில் தமிழக அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த பள்ளிக்கல்வித்துறை பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.  இந்த நிலையில் தமிழக அரசு மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை நடைமுறைபடுத்தி வருகிறது. மேலும் மாணவர்கள் கல்வியை பாதியில் விடாமல் தடுக்க பல்வேறு நிதி உதவிகளை வழங்கி வருகிறது.

இந்த நிலையில் பலங்குடினர்  மாணவர்கள் பட்டப்படிப்பு படிக்க தாட்கோ மூலம் நிதியுதவி வழங்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக ஹோட்டல் மேலாண்மையில் பட்டப்படிப்பு படிக்க உதவி தொகை வழங்க உள்ளது. மேலும் இந்த நிதி உதவியை பெற மாணவர்கள் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் 45% சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

இந்த உதவி தொகைக்கு விண்ணப்பிக்க www.tnhdco.com என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம். இந்த  உதவி தொகை மாணவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்றம் அறிவித்துள்ளது. இந்த உதவி தொகை மாணவர்கள் பயன்படுத்தி  கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.