நம் உடல் இயக்கத்திற்கு உணவு அவசியமான விஷயமாக உள்ளது.ஆரோக்கியமான உணவுகள் நோய் பாதிப்புகளில் இருந்து நம்மை காக்கிறது.இன்று உலகம் முழுவதும் பலவித உணவுக் கலாச்சாரங்கள் பின்பற்றப்படுகிறது.
எவ்வகை உணவாக இருந்தாலும் அவற்றை சரியான முறையில் உட்கொள்ள வேண்டியது முக்கியம்.அதேபோல் உணவுகளை உட்கொண்ட பிறகு நாம் சில விஷயங்களை தவிர்க்க வேண்டும்.இல்லையேல் உணவே மருந்து என்ற நிலை மாறி உணவே விஷம் என்றாகிவிடும்.
நாம் உணவு உட்கொண்ட பின்னர் செய்யவேக் கூடாத 8 விஷயங்கள்:
1)உணவு சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை கைவிட வேண்டும்.உணவு உட்கொண்ட உடனே தண்ணீர் பருகினால் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் மற்றும் செரிமானப் பிரச்சனை ஏற்படும்.
2)உணவு உட்கொண்ட உடனே சூடான காபி,டீ போன்ற பானங்கள் பருகுவதை தவிர்க்க வேண்டும்.உணவு சாப்பிட்ட உடன் சூடான பானங்கள் பருகினால் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படும்.
3)உணவு சாப்பிட்ட உடன் குளிப்பதை தவிர்க்க வேண்டும்.இதனால் உடல் உஷ்ணம் அதிகமாகிவிடும்.சாப்பிட்ட உடன் குளிப்பதால் இரத்த ஓட்டம் தடைபடும்.
4)நீங்கள் உணவு உட்கொண்ட பிறகு பழச்சாறு அல்லது திரவங்கள் பருகுவதை தவிர்க்க வேண்டும்.இதனால் அஜீரணக் கோளாறு ஏற்படும்.
5)சாப்பிட்ட உடன் தூங்குவதை தவிர்க்க வேண்டும்.இதனால் அஜீரணக் கோளாறு,உடல் பருமன் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
6)சாப்பிட்ட உடன் நடப்பதை தவிர்க்க வேண்டும்.இதனால் வயிறு தொடர்பான பிரச்சனைகள் அதிகமாகும்.
7)அதேபோல் சாப்பிட்ட பிறகு ஓடுதல்,உடற்பயிற்சி செய்தல் போன்ற விஷயங்களை தவிர்க்க வேண்டும்.ஏற்கனவே உட்கொண்ட உணவு செரிமானமாகாத பட்சத்தில் மேலும் உணவுகள் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.
8)சாப்பாடு சாப்பிட்ட பிறகு பழங்கள்,குளிர்பானங்கள் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.இதனால் செரிமானப் பிரச்சனை ஏற்படலாம்.உணவிற்கு பின் பழங்கள் சாப்பிட்டால் வாயுத் தொல்லை அதிகமாகும்.