தெரிந்து கொள்ளுங்கள்! தினமும் நாம் எத்தனை லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும் தெரியுமா?

Photo of author

By Divya

தெரிந்து கொள்ளுங்கள்! தினமும் நாம் எத்தனை லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும் தெரியுமா?

Divya

இவ்வுலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் தண்ணீர் இன்றியமையாத ஒன்றாகும்.உயிர் வாழ அடிப்படை விஷயமே தண்ணீர்தான்.அப்படி இருக்கையில் நாம் தினமும் எவ்வளவு லிட்டர் தண்ணீர் பருகினால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பது குறித்து அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம்.

தண்ணீர் ஆரோக்கிய பலன்கள்:-

நமது உடலுக்கு தேவையான தண்ணீரை பருகினால் உறுப்புகள் சீராக இயங்கும்.சருமம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்க உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள வேண்டியது முக்கியம்.

சிறுநீரக ஆரோக்கியம் மேம்பட தேவையான அளவு தண்ணீர் பருக வேண்டும்.உடல் சுறுசுறுப்பாக இயங்க தண்ணீர் பருக வேண்டும்.

உடலில் நீர்ச்சத்து குறைந்தால் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளை அனுபவிக்க நேரிடும்.சிறுநீர் கழிக்கும் பொழுது எரிச்சல்,சிறுநீர் மாற்றம் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

உடலில் நீர்ச்சத்து குறைந்தால் சரும வெடிப்பு,சரும எரிச்சல் போன்ற பிரச்சனைகளை அனுபவிக்க நேரிடும்.அதேபோல் அளவிற்கு அதிகமாக தண்ணீர் பருகினால் மூளை ஆரோக்கியம் மோசமாகிவிடும்.வயிறு வீக்கம்,வாந்தி,குமட்டல் உணர்வு போன்றவை அதிக தண்ணீர் குடிப்பதால் ஏற்படுகிறது.அதேபோல் அதிகளவு தண்ணீர் குடிப்பதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படும்.

எனவே தினமும் சரியான அளவு தண்ணீர் பருக வேண்டியது அவசியம்.நாளொன்றுக்கு எவ்வளவு தண்ணீர் பருக வேண்டும் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.வயது மற்றும் உடல் எடையை பொறுத்து தண்ணீர் அளவு மாறுபடும்.19 வயதை கடந்தவர்கள் தினமும் இரண்டரை லிட்டர் தண்ணீர் அவசியம் பருக வேண்டும்.

30 வயதை கடந்தவர்கள் தினமும் மூன்றரை லிட்டர் தண்ணீர் பருக வேண்டும்.அதாவது தினமும் எட்டு கிளாஸ் தண்ணீர் குடிப்பதை அனைவரும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.குழந்தைகள் தினமும் ஒரு லிட்டர் தண்ணீர் பருக வேண்டும்.உடல் களைப்பு பிரச்சனையை சந்திப்பவர்கள் கட்டாயம் மூன்று லிட்டர் தண்ணீர் பருக வேண்டும்.