நாம் இளம் வயதில் பின்பற்றும் உணவுமுறை மற்றும் வாழ்க்கைமுறை பழக்கங்கள்தான் நமக்கு வயதான பிறகுதான் அதன் விளைவுகளை காண்பிக்கும்.ஆரோக்கிய உணவுமுறையை பின்பற்றினால் நமது உடல் ஆரோக்கியம் மேம்படும்.முதுமையை சில ஆண்டுகளுக்கு தள்ளிப்போடலாம்.ஆனால் இளமையில் ஆரோக்கியம் இல்லாத உணவுகளை சாப்பிட்டால் வயதாகும் பொழுது பல்வேறு பாதிப்புகளை நாம் சந்திக்க வேண்டியிருக்கும்.
30 வயதை கடந்தவர்கள் தங்கள் உணவுமுறையில் அதிகளவு அக்கறை செலுத்த வேண்டும்.30 வயதிற்கு பிறகு உடலில் பல மாற்றங்கள் ஏற்படும்.கடந்த காலங்களில் 50 வயதை கடந்த பின்னரே முதுமை எட்டி பார்த்தது.ஆனால் இன்றைய உலகில் 30 வயதிற்குள்ளேயே முகச்சுருக்கம்,முழங்கால் வலி,தலை வழுக்கைக்கு போன்ற முதுமை கால பாதிப்பை சந்திக்கின்றனர்.
எனவே 30 வயதை கடந்தவர்கள் தங்கள் உணவுப் பழக்கத்தை எப்படி மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.நீங்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.எலும்பு வலிமையை அதிகரிக்க கால்சியம் உணவுகளை சாப்பிட வேண்டும்.பால்,சோயா போன்றவற்றில் கால்சியம் சத்து நிறைந்து காணப்படுகிறது.
முருங்கை,பேரிச்சை போன்ற பழங்களில் இரும்புச்சத்து நிறைந்து காணப்படுகிறது.முட்டை,அசைவத்தில் புரதம் நிறைந்திருக்கிறது.வைட்டமின் டி சத்து சூரிய ஒளியின் மூலம் கிடைக்கும்.ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மீன்,பாதாம்,வால்நட்,அவகேடோ போன்றவற்றில் இருந்து பெறலாம்.
நார்ச்சத்து அனைத்து கீரைகளிலும் கிடைக்கும்.அதேபோல் நீர்ச்சத்து பழங்கள் மற்றும் காய்கறிகளில் இருந்து கிடைக்கும்.அசைவ உணவுகளை அதிக எண்ணெய் சேர்க்காமல் சமைத்து சாப்பிடலாம்.மாவுச்சத்து உணவுகளை தவிர்ப்பது நல்லது.உலர் விதைகள்,உலர் பழங்களை தினமும் உட்கொள்ளலாம்.
ஆரோக்கிய உணவுகளுடன் உடற்பயிற்சி,யோகா,தியானம்,மூச்சுப்பயிற்சி போன்றவற்றை செய்யலாம்.இதுபோன்ற ஆரோக்கிய பழக்கங்கள் மூலம் உடல்,மனம்,சரும் ஆரோக்கியம் மேம்படும்.