தெரிந்து கொள்ளுங்கள்! சின்ன வெங்காயத் தோல் எந்த நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது தெரியுமா?

0
62

வீட்டில் இருக்கின்ற பொருட்களை கொண்டு நமக்கு ஏற்பட்டிருக்கும் நோய் பாதிப்புகளை குணமாக்கி கொள்ள முடியும்.

 

*சைனஸ்

 

உங்களுக்கு ஒவ்வாமை இருந்தால் அதை சின்ன வெங்காயத் தோலை வைத்து சரி செய்து கொள்ளலாம்.முதலில் சின்ன வெங்காயத் தோலை சேகரித்து தலையணையின் அடியில் வைத்து உறங்கினால் சைன்ஸ் பாதிப்பு குணமாகும்.

 

அதேபோல் தினமும் காலையில் ஒரு கைப்பிடி துளசி இலையை உட்கொண்டு வந்தால் சைன்ஸ் பாதிப்பு குணமாகும்.

 

*அஜீரணக் கோளாறு

 

ஒரு துண்டு இஞ்சியை இடித்து சாறு எடுத்து வைத்துக் கொள்ளவும்.பிறகு ஒரு தேக்கரண்டி சீரகத்தை உரலில் போட்டு இடித்துக் கொள்ளவும்.பின்னர் அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தவும்.

 

அதன் பின்னர் இஞ்சி சாறு மற்றும் சீரகத்தை போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பருகி வந்தால் செரிமானப் பிரச்சனை சரியாகும்.

 

*வயிறுக் கோளாறு

 

ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை நெயில் வறுத்து பொடியாக்கி கொள்ளவும்.இதை ஒரு கிளாஸ் மோரில் கலந்து பருகினால் வயிறு சம்மந்தப்பட்ட அனைத்து பாதிப்புகளும் குணமாகும்.

 

*நரம்பு தளர்ச்சி

 

சேப்பங்கிழங்கை அடிக்கடி உணவாக எடுத்துக் கொண்டால் நரம்பு தளர்ச்சி பாதிப்பு குணமாகும்.

 

*சிறுநீரக கல்

 

கற்பூரவல்லி இலையை அரைத்து சாறு எடுத்து அருந்தி வந்தால் சிறுநீரகத்தில் உள்ள கற்கள் அனைத்தும் கரைந்துவிடும்.

 

*கல்லீரல் வீக்கம்

 

தினமும் இரண்டு பெரிய நெல்லிகாயை அரைத்து சாறு எடுத்து அருந்தி வந்தால் கல்லீரலில் உள்ள கழிவுகள்,கல்லீரல் வீக்கம் அனைத்தும் நீங்கிவிடும்.

 

*சர்க்கரை நோய்

 

முருங்கை விதையை நெயில் வறுத்து பொடியாக்கி 10 கிராம் அளவிற்கு பாலில் கலந்து பருகி வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.

 

*கண் பார்வை குறைபாடு

 

பாதாம் பருப்பை வறுத்து பொடியாக்கி பாலில் கலந்து பருகி வந்தால் கண் பார்வை திறன் அதிகரிக்கும்.

Previous articleமூச்சு பிடிப்பில் இருந்து நிவாரணம் கிடைக்க கஞ்சியில் இந்த பொருளை கலந்து முதுகில் தடவுங்கள்!!
Next articleதொடர் இருமலால் தொண்டையில் புண் வந்துவிட்டதா? இதை ஆற்றும் சிறந்த பாட்டி வைத்திய குறிப்பு இதோ!!