தெரிந்து கொள்ளுங்கள்! கர்ப்பிணி பெண் தேங்காய் தண்ணீர் குடித்தால்.. குழந்தை செவப்பாக பிறக்குமா?

Photo of author

By Gayathri

ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் முக்கியமான தருணமாக இருப்பது அவர்களின் கர்ப்ப காலம் தான்.பிரசவிக்கும் பெண்களுக்கு அது மறு பிறவியாக உள்ளது.கர்ப்ப காலத்தில் பெண்கள் ஆரோக்கியமாக உணவுகளை கொள்ள வேண்டியது முக்கியம்.

 

சிலர் குழந்தை கலராக பிறக்க வேண்டுமென்று எண்ணி குங்குமப்பூ பால் குடிப்பார்கள்.அதேபோல் பழச்சாறு,சிவப்பு நிற காய்கள் சாப்பிட்டால் குழந்தை நல்ல கலராக பிறக்கும் என்பதை இந்திய பெற்றோர்கள் நம்புகின்றனர்.

 

கர்ப்ப காலத்தில் குங்குமப்பூ பால் குடிப்பது தாய்க்கும் குழந்தைக்கும் நல்லது.ஆனால் குழந்தை கலராக பிறக்கும் என்று சொல்லப்படுவது வெறும் கட்டுக்கதையை.அதேபோல் கர்ப்ப காலத்தில் தேங்காய் நீர் அல்லது இளநீர் பருகி வந்தால் குழந்தை அழகாக பிறக்கும் என்று சொல்லப்படுகிறது.இளநீர் ஒரு குளிர்ச்சி நிறைந்த பொருள்.உடல் சூடு தணிய நீர்ச்சத்தை அதிகரிக்க கர்ப்பிணிகள் இளநீர் குடிக்க வேண்டும்.ஆனால் குழந்தையின் அழகிற்கும் இளநீருக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.

 

இதுபோன்ற பானங்களை கொண்டு கருவில் வளரும் குழந்தையின் நிறத்தை நிர்ணயிக்க முடியாது.உண்ணும் உணவிற்கும் நிறத்திற்கும் எந்த ஒரு சம்மந்தமும் இல்லை என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.குங்குமப் பூ பால்,தேங்காய் நீர் குழந்தையை அழகாக்கும் என்று சொல்லப்படுவதற்கு எந்தஒரு ஆதாரமும் இல்லை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

 

குழந்தையின் குழந்தையின் நிறம் பெற்றோர் ஜீனை பொறுத்தே உள்ளது.ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள்,பழச்சாறு,குங்குமப்பூ பால்,இளநீர் போன்றவை தாய் மற்றும் கருவில் வளரும் குழந்தையை ஆரோக்கியமாக வைத்துக் மட்டுமே உதவும்.கர்ப்பிணி பெண்கள் மருத்துவரின் ஆலோசனை இன்றி இதுபோன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளக் கூடாது.