தெரிந்து கொள்ளுங்கள்!! பல்லில் படிந்த அழுக்கு கறைகளை டூத்பிக் கொண்டு எடுப்பது ஆபத்தானதா?

Photo of author

By Divya

தெரிந்து கொள்ளுங்கள்!! பல்லில் படிந்த அழுக்கு கறைகளை டூத்பிக் கொண்டு எடுப்பது ஆபத்தானதா?

Divya

நம் பற்களை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டியது மிக மிக முக்கியம்.உணவு உட்கொண்ட பிறகு பற்களை முறையாக பராமரிக்க வேண்டும்.பல் இடுக்குகளில் அழுக்குகள்,உணவுத் துகள்கள் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

நாம் பற்களை முறையாக சுத்தம் செய்யாவிட்டால் இடுக்குகளில் அழுக்கு படிதல்,பல் சொத்தையாதல்,ஈறுகளில் வீக்கம் உண்டதால்,வாயில் துர்நாற்றம் வீசுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.இதனால் சிலர் பல் இடுக்குகளில் படிந்து கிடக்கும் அழுக்குகளை நீக்க டூத்பிக் பயன்படுத்துகின்றனர்.

முன்பெல்லாம் வேப்பங்குச்சி பயன்படுத்தி பல் துலக்கி வந்தோம்.இதனால் பற்களில் அழுக்கு சேராமல் இருந்தது.ஆனால் தற்பொழுது பிரஷ் பயன்படுத்துவதால் அழுக்குகள் தேங்கி பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

பல் இடுக்கு அழுக்குகளை சுத்தம் செய்ய டூத்பிக் பயன்படுத்தலாமா?

உண்மையில் டூத்பிக் பயன்படுத்தினால் பல் ஈறுகளின் ஆரோக்கியம் மோசமாகிவிடும்.டூத்பிக் ஒரு குச்சி அமைப்பில் கூர்மையாக இருப்பதால் ஈறுகளை எளிதில் சேதப்படுத்திவிடும்.

அழுக்குகளை எடுக்க முயற்சிக்கும் பொழுது பல் ஈறுகளில் இரத்தக் கசிவு ஏற்படலாம்.டூத்பிக் ஈறுகளில் பட்டால் வீக்கம் ஏற்படும்.அடிக்கடி டூத்பிக் பயன்படுத்தினால் பற்களின் உணர்திறன் குறையும்.

டூத்பிக்கை அடிக்கடி பயன்படுத்தினால் பற்களுக்கு இடையே இடைவெளி வந்துவிடும்.டூத் பற்களின் வேரை சேதமாக்கிவிடும்.தொடர்ந்து டூத்பிக் பயன்படுத்தினால் பற்களின் மேற்பரப்பு சேதமடைந்துவிடும்.டூத்பிக்கிற்கு பதில் Floss பயன்படுத்தி அழுக்குகளை வெளியேற்றலாம்.நீங்கள் டூத்பிக்கை பயன்படுத்துகிறீர்கள் என்றால் சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது முக்கியம்.