இன்று ஹார்ட் அட்டாக் பாதிப்பால் 30 வயதிற்குள் இருப்பவர்கள் அதிகம் உயிரிழக்கின்றனர் என்று ஆய்வுகள் சொல்கிறது.இந்தியாவில் சமீப காலமாக இளம் வயது மாரடைப்பு அதிகரித்து வருவதால் இது இந்தியாவின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது.நன்றாக விளையாடி கொண்டிருந்த குழந்தைகள் திடீரென்று மயங்கி விழுந்து உயிரிழக்கின்றனர் என்ற செய்திகள் அவ்வப்போது வந்த வண்ணம் உள்ளது.இதை பார்க்கும் பொழுது அனைவருக்கும் ஒருவித அச்ச உணர்வு ஏற்படத்தான் செய்கிறது.
மாரடைப்பு எதனால் வருகிறது என்பதை நாம் நிச்சயம் அறிந்து கொள்ள வேண்டும்.முன்பெல்லாம் ஏதேனும் உடல் நலக் கோளாறுகள் இருந்தால் மாரடைப்பு வரும்.இந்த மாரடைப்பு பாதிப்பை 45 வயதிற்கு மேல் இருப்பவர்கள் மட்டுமே அனுபவித்து வந்தனர்.ஆனால் தற்பொழுது இளம் பருவ வயதினரிடையே மாரடைப்பு அதிகரித்து வரும் நோயாக மாறிவருகிறது.
இளம் வயதில் மாரடைப்பு வர காரணம்?
நாம் பின்பற்றும் உணவுமுறை பழக்கம் தான் இளம் வயதிலேயே மாரடைப்பு வர காரணமாகிறது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.தற்பொழுது வீட்டு சாப்பாடு சாப்பிடும் பழக்கம் நம்மிடம் குறைந்து வருகிறது.ஹோட்டல் உணவுகள்,ஜங்க் பூட்ஸை விரும்பி சாப்பிட்டு வருகின்றோம்.
நாம் எடுத்துக் கொள்ளும் இதுபோன்ற உணவுகள் நம் உடலுக்கு எந்த விதத்திலும் ஆரோக்கியத்தை கொடுக்காது.மாறாக உடலுக்குள் நோய்கள் உருவாக இந்த உணவுகள் காரணமாகிவிடும்.
மாரடைப்பு வர காரணங்கள்:
1)கொலஸ்ட்ரால்
2)தமனி அடைப்பு
3)தமனி சுவரில் கொழுப்பு படிதல்
மாரடைப்பு அறிகுறிகள்:
1)மார்பு பகுதியில் வலி
2)சுவாசப் பிரச்சனை
3)தோள்பட்டை வலி
4)முதுகு வலி
5)நெஞ்சு இறுக்கம்
6)உடல் பலவீனம்
7)குமட்டல் உணர்வு
8)தலைசுற்றல்
9)படபடப்பு
10)அதிகம் வியர்த்தல்
மாரடைப்பிற்கு வழிவகுக்கும் உணவுகள்:
**பீட்ஸா
இன்று உணவுக் கலாச்சாரம் முற்றிலும் மாறிவிட்டது.ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடும் உணவுகளில் ஒன்று தான் பீட்ஸா.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர்.இந்த பீட்ஸாவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாரடைப்பு ஏற்பட அதிக வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
**ஐஸ்க்ரீம்
இந்த பெயரை சொன்னாலே குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும் நாவூறும்.இதன் சுவையால் பலரும் இதை அடிக்கடி சாப்பிடுகின்றனர்.ஆனால் இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாரடைப்பு ஏற்படும்.
**சோடா
அனைவரும் விரும்பி பருகும் சோடா உள்ளிட்ட குளிர் பானங்கள் மாரடைப்பு ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
**KFC சிக்கன்
இந்த உணவை ஒருமுறையாவது சாப்பிட்டுவிட வேண்டும் என்பது பலரின் ஆசை.காரசாரமான க்ரிஸ்பி மற்றும் ஜூஸியாக இருக்கும் இந்த சிக்கனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாரடைப்பு ஏற்படும்.
**பொரித்த உருளைக்கிழங்கு
பிரென்ச் பிரைஸ் என்று அழைக்கப்படும் பொரித்த உருளைக்கிழங்கை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கொலஸ்ட்ரால் அதிகரித்து மாரடைப்பு வரக் கூடும்.