தெரிந்து கொள்ளுங்கள்!! கர்ப்பிணி பெண்கள் சுடுநீரில் குளிப்பதால் ஏற்படும் விளைவுகள்?

0
44

பெண்கள் தங்கள் வாழ்நாள் பலனை தாய்மையின் மூலம் பெறுகின்றனர்.திருமணமான பெண்களுக்கு சீக்கிரம் தாய்மை வரம் பெற வேண்டும் என்பது மிகப்பெரிய கனவாக இருக்கிறது.பெண்கள் தங்கள் கருவுற்ற காலத்தில் அதிக மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.கருவில் வளரும் குழந்தையின் நலனிற்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்கின்றனர்.

உண்ணும் உணவில் அதிக கவனத்தை செலுத்துகின்றனர்.பெண்கள் தாங்கள் கருவுற்றமுதல் மூன்று மாதம் அதிக கவனமுடன் இருக்க வேண்டியது முக்கியம்.முதல் மூன்று மாதத்தில் சிறு தவறு நேர்ந்தாலும் கருச்சிதைவு ஏற்பட்டுவிடும்.

குறிப்பாக கருவுற்ற பெண்கள் முதல் மூன்று மாதம் சுடுநீரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும்.உடல் சூட்டை அதிகரிக்கும் உணவுகள் சாப்பிடுதல்,உடல் சூட்டை அதிகரிக்கும் விஷயங்களை செய்தல் போன்ற காரணங்களால் கருச்சிதைவு ஏற்படலாம்.

பப்பாளி உடல் சூட்டை அதிகரிக்கும் ஒரு பழம் என்பதால்தான் கருவுற்ற பெண்கள் பப்பாளி பழம் சாப்பிடக் கூடாது என்று பெரியவர்கள் சொல்கின்றனர்.அதேபோல் அன்னாசி பழம்,கருப்பு எள் போன்றவை உடல் சூட்டை அதிகரிக்கும் உணவுப் பொருட்கள் என்பதாலே அதையும் கருவுற்ற பெண்கள் தவிர்க்க வேண்டுமென்று அறிவுறுத்துகின்றனர்.

அப்படி இருக்கையில் உடலை சூடாக்கும் சுடுநீர் குளியல் நிச்சயம் கருவில் வளரும் சிசுவிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பது பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.கருவுற்ற பெண்களுக்கு கை,கால் வீக்கம் ஏற்படுவதால் சுடுநீரில் குளிக்க வேண்டுமென்று தோன்றும்.ஆனால் சுடுநீர் குளியல் கருச்சிதைவை ஏற்படுத்திவிடும்.

கருவுற்ற பெண்கள் உடலில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட் தாண்டக் கூடாது.சில பெண்கள் அதிக சூடான நீரில் குளிப்பதை விரும்புகின்றனர்.ஆனால் இதுபோன்று செய்வது மிகவும் தவறான பழக்கமாகும்.சுடுநீர் குளிக்க தோன்றினால் வெது வெதுப்பான தண்ணீரில் குளிக்கலாம்.அதேபோல் சுடுநீர் குளியல் 10 நிமிடத்திற்கு மேல் தாண்டக் கூடாது.

Previous articleஎந்த வயதுடையவர்கள் எத்தனை முட்டை சாப்பிட வேண்டும்:?அறிவியல் பூர்வமான விளக்கம்!!
Next articleநாள்பட்ட அடிவயிற்று தொப்பை மற்றும் பிரசவ தொப்பையை குறைக்க வேண்டுமா:? இதோ உங்களுக்கான மிக மிக எளிய டிப்ஸ்!!