நாம் தினமும் பயன்படுத்தும் கறிவேப்பிலை பல நன்மைகளை கொண்டிருக்கிறது.கறிவேப்பிலையில் நார்ச்சத்து,புரதம்,வைட்டமின்கள் நிறைந்து காணப்படுகிறது.தினமும் கறிவேப்பிலை சாப்பிட்டு வந்தால் முடி வளர்ச்சி நன்றாக இருக்கும்.
செரிமானப் பிரச்சனை நீங்க கறிவேப்பிலையை உட்கொள்ளலாம்.கறிவேப்பிலையில் இருக்கின்ற நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்கிறது.கறிவேப்பிலையை பொடித்து தேநீர் செய்து குடித்து வர வெள்ளை முடி கருமையாக மாறும்.
கறிவேப்பிலை ஊறவைத்த தண்ணீரை குடித்துவிட்டு கறிவேப்பிலையை சாப்பிட்டால் தோல் சம்மந்தபட்ட பிரச்சனைகள் குணமாகும்.தினமும் ஒரு கிளாஸ் கறிவேப்பிலை ஜூஸ் குடித்து வந்தால் உடலில் கெட்ட கொழுப்பு சேர்வது தடுக்கப்படும்.
கல்லீரலில் தேங்கிய அழுக்கு கழிவுகளை வெளியேற்ற கறிவேப்பிலை பானம் பருகலாம்.கறிவேப்பிலையில் இருக்கின்ற வைட்டமின் ஏ சத்து கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.குடலில் இருக்கின்ற கழிவுகளை வெளியேற்ற கறிவேப்பிலை உட்கொள்ளலாம்.கறிவேப்பிலை சாப்பிட்டால் வாந்தி,குமட்டல் போன்ற பிரச்சனைகள் குணமாகும்.
அதேபோல் தினமும் ஒரு கொத்து கறிவேப்பிலை சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் இருக்கின்ற சர்க்கரை அளவு கட்டுப்படும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.கறிவேப்பிலை தேநீர் செய்து குடித்து வந்தால் சர்க்கரை நோய் முதல் தலைமுடி பிரச்சனைவரை அனைத்து பிரச்சனைகளும் குணமாகும்.
தேவையான பொருட்கள்:-
1)கறிவேப்பிலை – இரண்டு கொத்து
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
முதலில் இரண்டு கொத்து கறிவேப்பிலையை வாணலியில் போட்டு லேசாக வறுத்து பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும்.
அடுத்து அதில் கறிவேப்பிலை பொடி கொட்டி கொதிக்க வைத்து குடித்து வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.