தெரிந்து கொள்ளுங்கள்!! பாதாம் பருப்பு சாப்பிட்டால் உடல் எடை ஏறுமா ஏறாதா?

Photo of author

By Divya

தெரிந்து கொள்ளுங்கள்!! பாதாம் பருப்பு சாப்பிட்டால் உடல் எடை ஏறுமா ஏறாதா?

Divya

நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கொடுக்கும் பாதாம் பருப்பு உடல் எடையை அதிகரித்துவிடும் என்று அஞ்சி அதை சாப்பிட தயங்குகின்றனர்.பாதாமில் புரதம்,வைட்டமின்கள்,கால்சியம்,பாஸ்பரஸ்,மெக்னீசியம்,காப்பர்,நார்ச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.

பாதாம் பருப்பை ஊறவைத்து சாப்பிட்டால் உடலுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும்.பாதாம் பருப்பில் உள்ள சத்துக்கள் சருமம் சார்ந்த பாதிப்புகளை சரி செய்ய உதவுகிறது.நாம் தினசரி பாதாம் பருப்பை சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

நாம் தினசரி பாதாம் பருப்பை உட்கொண்டால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.சருமம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாக பாதாம் பருப்பை சாப்பிடலாம்.பாதாமில் மெக்னீசிய சத்து அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.தினமும் ஐந்து பாதாம் பருப்பு உட்கொண்டால் உயர் இரத்த அழுத்தப் பாதிப்பு குணமாகும்.

பாதாம் பருப்பு மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.ஞாபக சக்தி அதிகரிக்க பாதாம் பருப்பை சாப்பிடலாம்.பாதாமை ஊறவைத்து சாப்பிடலாம்.அதேபோல் பொடித்து பவுடராக உட்கொள்ளலாம்.ஊறவைத்த பாதாம் பருப்பு சாப்பிட்டால் ஜீரண சக்தி அதிகரிக்கும்.

பாதாம் பருப்பு சாப்பிட்டு வந்தால் இளமை பொலிவை தக்க வைக்கலாம்.அதேபோல் கண் சம்மந்தபட்ட பாதிப்புகள் குணமாக பாதாம் பருப்பை உட்கொள்ளலாம்.பாதாம் பருப்பை சாப்பிட்டால் உடலில் ஆற்றல் அதிகரிக்கும்.

எலும்புகளின் வலிமை அதிகரிக்க பாதாம் பருப்பை சாப்பிடலாம்.தினசரி காலை நேரத்தில் பாதாம் பருப்பை சாப்பிட்டால் பசி கட்டுப்படும்.சிலர் பாதாம் பருப்பு சாப்பிட்டால் உடல் எடை அதிகரித்துவிடும் என்று நினைக்கின்றனர்.

ஆனால் உண்மையில் பாதாம் பருப்பு சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.இதில் கலோரி மிகவும் குறைவு என்பதால் டயட் இருப்பவர்கள் பாதாம் பருப்பை சாப்பிடலாம்.

பாதாம் பருப்பை சாப்பிட்டு வந்தால் உடலில் இருக்கின்ற தேவையற்ற கொழுப்புகள் கரையும்.பாதாம் பருப்பை பொடித்து பாலில் கலந்து குடித்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.பாதாம் சாப்பிடுவதால் பசி கட்டுப்படும் என்பதால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் பாதாம் பருப்பை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.