தெரிந்து கொள்ளுங்கள்!! நான்வெஜ் சாப்பிட்டால் பிளட் சுகர் எகிறி அடிக்குமா?

Photo of author

By Divya

தெரிந்து கொள்ளுங்கள்!! நான்வெஜ் சாப்பிட்டால் பிளட் சுகர் எகிறி அடிக்குமா?

Divya

இந்த உலகில் சர்க்கரை நோய் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.குறிப்பாக நம் நாட்டில் மட்டுமே அதிக எண்ணிக்கையில் சர்க்கரை நோயாளிகள் நடமாடிக் கொண்டிருக்கின்றனர்.கார்போ ஹைட்ரேட் உணவுகள்,சுத்திகரிக்கபட்ட சர்க்கரை உணவுகள்,மாவுச்சத்து நிறைந்த உணவுகளால் இரத்த சர்க்கரை அளவு உயர்கிறது.

முன்பெல்லாம் குடும்பத்தில் யாராவது சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு இருந்தால் மட்டுமே குடும்ப உறுப்பினர்களுக்கு அந்த பாதிப்பு ஏற்படும்.ஆனால் தற்பொழுது இளம் வயதினர் முதல் பெரியவர்கள் வரை இன்று சர்க்கரை நோய் பாதிப்பால் அவதியடைந்து வருகின்றனர்.இதற்கு முக்கிய காரணம் மோசமான உணவுப்பழக்க வழக்கங்கள்.

குறிப்பாக எண்ணையில் வறுத்த மற்றும் பொரித்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் சர்க்கரை அளவு உயர்ந்துவிடும்.இதில் அசைவ உணவுகள்,துரித உணவுகள் சாப்பிட்டால் உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரித்துவிடும்.

சர்க்கரை உள்ளவர்கள் வேகவைத்த முட்டை,மீன்,கோழி இறைச்சி,புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்.அதேபோல் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.ஆனால் சிவப்பு இறைச்சி அதாவது மாட்டிறைச்ச,ஆட்டிறைச்சி போன்றவற்றை அதிகமாக உட்கொண்டால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்துவிடும்.

ஆனால் வறுத்த பொரித்த உணவுகளை உட்கொண்டால் கிளைசிமிக் இன்டெக்ஸ் அளவு அதிகரித்து சர்க்கரை அளவு உயர்ந்துவிடும்.அதேபோல் கொழுப்பு நிறைந்த அசைவ உணவுகளை உட்கொண்டால் இரத்த சர்க்கரை அளவு உயர்ந்துவிடும்.

முட்டையின் மஞ்சள் கரு,நண்டு,சிவப்பு இறைச்சி போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.அசைவ உணவுகளை எண்ணையில் பொரித்து சாப்பிட்டால் இரத்த சர்க்கரை அளவு அதிகரித்துவிடும்.எனவே அசைவ உணவுகளை குறைந்த எண்ணெயில் வறுத்து சாப்பிடுங்கள்.அதேபோல் கொழுப்பு நிறைந்து உணவுகளை தவிர்த்துவிடுங்கள்.பதப்படுத்தி வைக்கப்படும் அசைவ உணவுகளை முற்றிலும் தவிர்த்துவிடுங்கள்.