விரல்களில் நகச்சுற்று வந்துவிட்டதா! அதற்கு வெற்றிலையை சுண்ணாம்புடன் சேர்த்து இப்படி பயன்படுத்துங்க! 

Photo of author

By Rupa

விரல்களில் நகச்சுற்று வந்துவிட்டதா! அதற்கு வெற்றிலையை சுண்ணாம்புடன் சேர்த்து இப்படி பயன்படுத்துங்க!
ஒரு சில சமயங்களில் நம்முடைய விரல்களில் நகச்சுற்றுகள் வந்துவிட்டால் அதை எவ்வாறு சரி செய்யும் மருந்தை தயார் செய்ய தேவையான பொருட்கள், எவ்வாறு தயார் செய்து என்பது குறித்து பார்க்கலாம்.
நகச்சுத்தி என்பது பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகளால் ஏற்படும் பாதிப்புகள் ஆகும். இந்த நகச்சுத்தி வந்துவிட்டால் நம்முடைய கை அல்லது கால் விரல்கள் மஞ்சள் நிறமாக மாறும். மேலும் அதிக வலி ஏற்படும். இதை ஆரம்பத்தில் குணப்படுத்தினால் அதிக வலி ஏற்படுவதால் இருந்து இருந்தும் அதிக பாதிப்புகளில் இருந்தும் தப்பித்துக் கொள்ளலாம்.
அதிக வலியை தரக்கூடிய நகச்சுத்தியை சரி செய்ய சுண்ணாம்பும் வெற்றிலையும் போதும். எனவே இந்த பதிவில்  நகச்சுத்தி வந்துவிட்டால் என்ன செய்வது என்பது குறித்து பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்…
* வெற்றிலை
* சுண்ணாம்பு
செய்முறை…
அம்மியில் வெற்றிலை மற்றும் சுண்ணாம்பு இரண்டையும் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த இரண்டு பொருட்களையும் அம்மியில் வைத்து அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த இந்த வெற்றிலை சுண்ணாம்பு கலவை நம்முடைய நகச்சுத்தியை குணப்படுத்தும்.
நாம் அரைத்து வைத்துள்ள இந்த சுண்ணாம்பு வெற்றிலை கலவையை நகச்சுத்தியை வந்த இடத்தில் தேய்க்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் நகச்சுத்தி குணமாகும்.