தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இருக்கக்கூடிய ரேஷன் அட்டைதாரர்கள் தங்களுடைய ரேஷன் கடைகளுக்கு சென்று குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினரின் கைரேகைகளையும் பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்ய வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.
மார்ச் 31ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருக்கும் பொழுதிலும் அதற்கான நாட்கள் குறைவாக இருப்பதால் கைரேகை பதிவு செய்யாதவர்கள் உடனடியாக சென்று அருகில் இருக்கக்கூடிய ரேஷன் கடைகளில் கைரேகையை பதிவு செய்து கொள்ளுமாறும், ஏற்கனவே கைரேகை பதிவு செய்த முடித்து விட்டோம் என எண்ண கூடியவர்கள் உங்களுடைய ரேஷன் அட்டைகளில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் கைரேகைகளும் பதிவு செய்து உள்ளதா என்பதை சரி பார்த்துக் கொள்ளும் படியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் பயன்படுத்தப்பட்டு வரும் குடும்ப அட்டைதாரர்கள் கைரேகைகளை முழுவதுமாக முடிக்கும் பட்சத்தில் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அவர்களுக்கான ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்றும் கைரேகை முடிக்கவில்லை என்றால் அவர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்குவதால் தடை ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. குடும்ப அட்டைகளில் இருக்கக்கூடியவர்கள் வெளியூர்களில் அல்லது வேறு ஏதேனும் இடங்களில் இருக்க நேரிட்டால் அவர்கள் அந்தந்த இடங்களில் உள்ள ரேஷன் கடைகளை அணுகி தங்களுடைய கைரேகைகளை பதிவு செய்யலாம் என்று தமிழக அரசு மற்றும் அந்தந்த மாவட்ட ஆட்சியர் மூலம் அறிவுரைகள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.