சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்பு:இனி தந்தைக்கும்!அறிவித்தது பின்லாந்து!

0
131

சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்பு:இனி தந்தைக்கும்!அறிவித்தது பின்லாந்து!

பிரசவத்தின் போது தாய்க்கு வழங்குவது போல தந்தைக்கும் இனி சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்பு வழங்கப்படும் என பின்லாந்து அரசு அறிவிக்கப்பட்டுள்ளது.

அலுவலகம் செல்லும் கர்ப்பமான பின்னர் வேலையை மறந்துவிட வேண்டிய சூழ்நிலையே ஒரு காலத்தில் நிலவி வந்தது. ஆனால் சோவியத் ரஷ்யா பெண்களுக்கு சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்பை முதல் முறையாக அறிவித்தது. பின்னர் அது அனைத்து நாடுகளிலும் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இப்போது பல நாடுகளில் பேறுகால விடுப்பு 6 மாத காலமாக இருக்கிறது. இந்நிலையில் இந்த பேறுகாலத்தின் மனைவிக்குத் துணையாக இருக்கவேண்டிய கணவன் வேலைக்கு சென்றுவிடுவதால் குழந்தைப் பராமரிப்பில் தங்கள் கடமையை செய்ய இயலாமல் போகிறது. அதனால் பல நாடுகளில் ஆண்களுக்கும் இந்த விடுமுறையை அதிகரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில் இது சம்மந்தமாக பின்லாந்து அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் தாய்க்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்குவது போல தந்தைக்கும் 5 மாதம் விடுப்பு வழங்கவேண்டும் என அறிவித்துள்ளது. இந்த முடிவை உலகநாடுகள் வரவேற்றுள்ள நிலையில் மற்ற நாடுகளிலும் இது போல கொண்டுவரவேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.

ஏற்கனவே மனிதவளத்தை மதிக்கும் விதமாக பின்லாந்து அரசு வாரத்தில் நான்கு நாட்கள் மட்டும் 6 மணிநேரம் என வேலை நேரத்தைக் குறைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleநானும் தோனியின் ரசிகன்தான்:ஆனால்? எம் எஸ் கே பிரசாத் கருத்து!
Next articleபெங்களூரில் திடீரென பாதி மட்டுமே சாய்ந்த கட்டிடம்: பெரும் பரபரப்பு