சேலம் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் தீ விபத்து! காரணம் என்ன போலீசார் விசாரணை!
சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான புறநோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். சேலம் அரசு மருத்துவமனையில் எப்போது பார்த்தாலும் மருத்துவமனை வளாகத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக அதிக அளவில் இருந்து கொண்டே வருகின்றனர். இந்நிலையில் மருத்துவமனையின் வடக்கு பகுதியில் சிறிய அறுவை சிகிச்சை அறை உள்ளது.
மேலும் அதற்க்கு அருகில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் இருப்பு வைக்கப்பட்டு இருக்கின்றது. அந்த அறையின் மேல் பகுதியில் செல்லும் ஒயர்களில் மின்கசிவு ஏற்பட்டதால் அங்கு தீப்பிடித்து எரி தொடங்கியது. மேலும் அதனைக் கண்ட சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் அதிர்ச்சி அடைந்து பரபரப்பாக அப்பகுதியில் இருந்து அலறி அடித்து ஓடினார்கள்.
மேலும் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இது குறித்து அங்கு இருந்த சிலர் சேலம் டவுன் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில் தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர். மேலும் அதிர்ஷ்டவசமாக அப்பகுதியில் இருந்த ஒருவருக்கும் உயிர் சேதம் ஏற்படாமல் தீயணைப்பு வீரர்கள் அவர்களை காப்பாற்றினார்கள். இந்த தீ விபத்தால் அரசு மருத்துவமனை முழுவதும் பெரும் பரபரப்பாக காணப்பட்டது .