ஆட்டோ மீது மின்கம்பி அறுந்து விழுந்ததால் தீ விபத்து!

ஆட்டோ மீது மின்கம்பி அறுந்து விழுந்ததால் தீ விபத்து!

ஆந்திர மாநிலம் சத்யசாய் மாவட்டம் தர்மபுரி பகுதியில் உள்ள சிலகொண்டைய பள்ளி சேர்ந்த சிலர் விவசாய பணிக்காக ஆட்டோவில் இன்று காலை சென்று கொண்டிருந்தார். அந்த ஆட்டோவில் ஓட்டுனர், பயணிகள் என மொத்தம் எட்டு பேர் பயணித்தனர். ஆட்டோ சிலகொண்டைய பள்ளி கிராமத்தை தாண்டி சென்று கொண்டிருந்தது. அப்போது மேலே சென்று கொண்டிருந்த உயர்மின் அழுத்த கம்பியானது திடீரென ஆட்டோவின் மீது அறுந்து விழுந்தது. அந்தக் கம்பியில் இருந்த மின்சாரம் ஆட்டோவின் மீது விரைந்து பாய தொடங்கியது.

இதனால் ஆட்டோவில் இருந்த அனைவர் மீது மின்சாரம் பாய்ந்து தீ வேகமாக பரவ தொடங்கியதால் ஆட்டோவில் இருந்து பயணித்த பயணிகள் தப்பிக்க வேண்டும் என்று முயற்சித்த போது தீ வேகமாக பரவியது. இதனால் ஆட்டோவில் பயணித்த பயணிகள் ஆட்டோவிற்குள்ளேயே சிக்கிக்கொண்டனர். இந்த தீ விபத்தல் ஆட்டோவில் பயணித்த எட்டு பயணிகளின் உடல் கருகி பரிதாபத்துடன் உயிரிழந்தனர். இதனால் ஆட்டோவில் பயணித்த எட்டு பேரின் உடல் எலும்பு கூடாக இறந்துகிடந்தனர்.

இந்த தகவலை அறிந்தவுடன் அந்த ஊர் கிராமத்து போலீசார், மீட்பு குழுவினர், மற்றும் கிராமத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இந்நிலையில்இறந்தவர்களின் உடலைக் கண்டு குடும்பத்தினர் அலறி அடித்து கத்தினர். மேலும் போலீசார் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், மின்கம்பி அறுந்து ஏற்பட்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

Leave a Comment