அடுத்தடுத்து 17 இடங்களில் தொடர் தீ விபத்து!! சென்னை மக்களுக்கு எச்சரிக்கை!!
தீபாவளி திருநாள் மக்கள் கவனமாக பட்டாசுகளை எடுத்து கொண்டாட வேண்டும் என அரசாங்கம் எச்சரித்து தான் வருகிறது. அதுமட்டுமின்றி குறிப்பிட்ட நேரம் கொடுத்து அதற்குள் மட்டுமே பட்டாசுகள் எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு உள்ளது.
கட்டுப்பாடுகள் போடப்பட்டாலும் அது கடுமையாக்கப்படாமல் இருக்கும் வரை இதுபோல பல நடந்து கொண்டே தான் இருக்கும். இன்று தீபாவளி திருநாளை ஒட்டி மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடுவார். அவர் பட்டாசு வெடித்ததில் சென்னையில் தற்பொழுது வரை 17 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அரசாங்கம் கொடுத்த நேரத்தையும் கடந்து பட்டாசுகள் வெடித்ததால் இந்த விபத்துக்கள் நடந்ததாக கூறுகின்றனர். பெரிய அளவில் எந்த ஒரு செய்தமும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளனர். இருப்பினும் மக்கள் இதனை முன்னெச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு பட்டாசு வெடிக்கும் பொழுது பாதுகாப்பை மேற்கொள்வது அவசியம்.
சென்னை அசோக் நகரில் தனியார் மருத்து தயாரிப்பு நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. பட்டாசு வெடித்ததில் தீயானது அங்கு நின்று கொண்டிருந்த வாகனம் மீது பட்டு முற்றிலும் எரிந்து சேதமானது. ஐந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு அத்தியை அணைக்க முயற்சிப்பதாக கூறுகின்றனர்.