சாலையில் ஓடிய அரசு பேருந்தில் தீ விபத்து! சாமர்த்தியமாக செயல்பட்ட ஓட்டுனர்

Photo of author

By CineDesk

சாலையில் ஓடிய அரசு பேருந்தில் தீ விபத்து! சாமர்த்தியமாக செயல்பட்ட ஓட்டுனர்

CineDesk

Fire accident in the government bus that ran on the road! Skilled driver

சாலையில் ஓடிய அரசு பேருந்தில் தீ விபத்து! சாமர்த்தியமாக செயல்பட்ட ஓட்டுனர்

மகாராஷ்ரா மாநிலம் புனேவிற்கும் யாவத்மால் என்ற பகுதிக்கும் இடையில் அரசு பேருந்து ஓன்று சென்று கொண்டு இருக்கும் போது  விபத்துகுள்ளானது.

பேருந்து  அவுரங்காபாத் அருகே சென்று கொண்டு இருக்கும்போது பேருந்தின் எஞ்சினில் இருந்து புகை வெளியாகி உள்ளது. அதனை அறிந்த ஓட்டுனர் பேருந்தை சாதுர்யமாக கையாண்டார்.

ஓட்டுனர் பேருந்தில் இருந்த அனைவரையும் வேகமாக பேருந்தில் இருந்து வெளியேற்றினார்.  பயணிகள் வெளியேறிய ஒரு சில நொடிகளில் பேருந்து தீ பிடித்து எரிந்தது. இது குறித்து பயணிகள் கூறும்போது ஒரு நிமிடம் தாமதம் ஆகி இருந்தாலும் அனைவரும் விபத்துக்கு உள்ளாகி இருப்போம் என்று அச்சத்துடன் கூறினார்.

அதனை தொடர்ந்து அங்கு வந்த தீ அணைப்பு துறையினர் பேருந்து பாதி எறிந்த நிலையில்  தீயை அணைத்தனர். இது குறித்து புனே போக்குவரத்து பிரிவு மேலாளர் கூறும்போது , ஓட்டுனர் சரியான தருணத்தில் சாமர்த்தியமாக செயல்பட்டதால் மிக பெரிய விபத்து தடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.