போன் பே தொடர்ந்த வழக்கில் மொபைல் பேக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீடிப்பு! சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

0
106

டிஜிட்டல் பண பரிவர்த்தனை செயலியான போன் பே நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. அதில் தங்களுடைய நிறுவனத்தின் வர்த்தக சின்னத்தை போல இருப்பதால் மொபைல் பே செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறி இருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம் சுந்தர் இரண்டு செயல்களின் வணிக சின்னங்களும் லோகோக்களும் முழுமையாக ஒரே விதமாக இல்லாவிட்டாலும் சாதாரண பொதுமக்கள் பார்வையில் ஒரே தோற்றத்தில் இருப்பதற்கான முகாந்திரங்கள் இருப்பதாக தெரிவித்து மொபைல் பே நிறுவனம் பணப்பரிவர்த்தனை சேவைகளை மேற்கொள்ளக்கூடாது என்று இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு இன்று மறுபடியும் விசாரணைக்கு வந்த போது, கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் பதில் அளிக்க கூடுதல் கால அவகாசம் கேட்டதை தொடர்ந்து விசாரணையை நவம்பர் மாதம் 16ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

அதுவரையில் பண பரிவர்த்தனையை சேவைகளை மேற்கொள்ள மொபைல் பே நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீடிக்கப்படுகிறது என்றும் உத்தரவிட்டிருக்கிறார் நீதிபதி