நாட்டு வெடிகுண்டு திடீரென வெடித்தது! தாயும் மகளும் உடல் கருகிய அதிர்ச்சி சம்பவம்!
நாட்டு வெடிகுண்டு தயாரிப்பு செய்தவர் வீட்டில் திடீரென விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு.
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் வசித்து வந்த பாண்டியம்மாள் என்பவர், தனது மகள் நிவிதாவுடன் சேர்ந்து வீட்டில் நாட்டு வெடிகளை உற்பத்தி செய்து விற்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இவரது கணவர் சில வருடங்களுக்கு முன்னதாக இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.
கணவர் செய்த நாட்டுவெடி தயாரிப்பு தொழிலை செய்து வந்த பாண்டியம்மாளின் வீட்டில், எப்போதும் போல நாட்டு வெடி தயாரிப்பு வேலை நடந்து கொண்டிருந்தது. இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் உற்பத்தி செய்யப்பட்ட நாட்டு வெடி வெடித்துச் சிதறியது.
இந்த விபத்தில் பாண்டியம்மாள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரின் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர். வீடுகள் இடிந்து விழுந்து படுகாயத்துடன் உயிருக்கு போராடிய நிவிதாவை அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
விபத்தின் தாக்கம் அதிகம் இருந்த காரணத்தால் எதிர்பாராதவிதமாக நிவிதா பாதிவழியிலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்கிடையே தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்து உடனடி மீட்பு பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வெடி விபத்து சம்பவத்தில் தாயும்,மகளும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

