மீண்டும் பட்டாசு தொழிற்சாலை விபத்து : முதல்வர் நிதியுதவி!!

Photo of author

By Savitha

மீண்டும் பட்டாசு தொழிற்சாலை விபத்து : முதல்வர் நிதியுதவி!!
விருதுநகர் மாவட்டம், பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 3 லட்ச ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம். கங்கரகோட்டை வருவாய் கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு தொழிற்சாலையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடிவிபத்து ஏற்பட்டது.
இந்த வெடி விபத்தில், மார்க்கநாதபுரத்தைச் சேர்ந்த 24 வயதான திருமதி. ஜெயசித்ரா  என்பவர் உயிரிழந்தார்.
இதையெடுத்து உயிரிழந்தவரின்  குடும்பத்தினருக்கு மூன்று லட்ச ரூபாய் நிதி உதவியை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தனது ஆறுதலையும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தனது அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளார்.
பட்டாசு தொழிற்சாலைகள், பட்டாசு பொருட்கள் வைத்திருக்கும் குடோன் போன்ற இடங்களில் தொடர் வெடிவிபத்துக்கள் அரங்கேறி வருகின்றன. இதுகுறித்து முறையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும், சமூக ஆர்வலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.